Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொளக்கப்போகுதே மழை.. கோவை, நீலகிரிக்கு அலர்ட்! வெளியான 5 மாவட்ட லிஸ்ட் - சென்னையில் லேசா பெய்யுமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

Chennai met announced Heavy rain alert for Nilgris, Kovai, Tirupur, Theni, Dindigul

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

26.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27.07.2023 முதல் 30.07.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

Chennai met announced Heavy rain alert for Nilgris, Kovai, Tirupur, Theni, Dindigul

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
வால்பாறை PTO (கோயம்புத்தூர்), சின்னகல்லாறு (கோயம்புத்தூர்) தலா 11, அவலாஞ்சி (நீலகிரி) 10, வொர்த் எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), நடுவட்டம் (நீலகிரி) தலா 9, பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி) 8, சின்கோனா (கோயம்புத்தூர்), மேல் பவானி (நீலகிரி), சோலையாறு (கோயம்புத்தூர்) தலா 7, கூடலூர் பஜார் (நீலகிரி), ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி) தலா 6, வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா 5, அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 4 பெரியார் (தேனி), சேலம், புதுச்சத்திரம் (நாமக்கல்), காட்டுமன்னார் கோயில் (கடலூர்), பெலாந்துறை (கடலூர்), எமரலாடு (நீலகிரி), லால்பேட்டை (கடலூர்), வேப்பூர் ( கடலூர்), குந்தா பாலம் (தேனிமலை), ஊத்து (திருநெல்வேலி), ஆழியாறு (கோயம்புத்தூர்), கொடநாடு (நீலகிரி) தலா 2, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), உதகமண்டலம் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), பொதுப்பணித் துறை (திருப்பூர்), திருப்பூர், களியல் (கன்னியாகுமரி), ராசிபுரம் (நாமக்கல்), பொதுப்பணித்துறை மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்), கிளென்மார்கன் (நீலகிரி), லக்கூர் (கடலூர்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), கெட்டி (நீலகிரி), கல்லட்டி (நீலகிரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), சீர்காழி (மயிலாடுதுறை), பாலமோர் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), அகரம் சீகூர் (பெரம்பலூர்), குண்டர் அணை (தென்காசி), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), கிளாசெருவை (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), கரூர் பரமத்தி (கரூர்), கிண்ணக்கொரை (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), துறையூர் (திருச்சி), கெத்தை (நீலகிரி), மணல்மேடு (மயிலாடுதுறை), அழகரை எஸ்டேட் (நீலகிரி), திருமூர்த்தி அணை (திருப்பூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), தொழுதூர் (கடலூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), திருமூர்த்தி IB (திருப்பூர்) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+