Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெளுத்து கட்டுனுச்சே கனமழை.. இன்னைக்கு இல்லையா? சென்னை வானிலை மையம் அறிவிப்பால் மக்கள் ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், இன்று கனமழைக்கான வாய்ப்பு இல்லை என்பது சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்மூலம் தெரிகிறது.

இன்று வெளியான அறிக்கையில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Chennai met announced moderate rainfall in Tamilnadu and Puduchery today

15.08.2023 முதல் 19.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சாத்தூர் (விருதுநகர்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) தலா 7, செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), செட்டிகுளம் (பெரம்பலூர்), லால்குடி (திருச்சி) தலா 6, திருப்போரூர் (செங்கல்பட்டு), செய்யாறு (திருவண்ணாமலை), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), மரக்காணம் (விழுப்புரம்), முத்துப்பேட்டை (திருவாரூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), அரிமளம் (புதுக்கோட்டை), போளூர் (திருவண்ணாமலை) தலா 5, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), ஆற்காடு (இராணிப்பேட்டை), ஆரணி (திருவண்ணாமலை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), தொழுதூர் (கடலூர்), ராணிப்பேட்டை, அதிராமபட்டினம் (தஞ்சாவூர்) தலா 4, பெரம்பலூர், லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), புதுக்கோட்டை, மணம்பூண்டி (விழுப்புரம்), நன்னிலம் (திருவாரூர்), மதுரை விமான நிலையம், கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), எட்டயபுரம் (தூத்துக்குடி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), பரமக்குடி (ராமநாதபுரம்), எறையூர் (பெரம்பலூர்), மலையூர் (புதுக்கோட்டை), எம்ஜிஆர் நகர் (சென்னை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), கொடைக்கானல் (திண்டுக்கல்), பாலவிதிதி (கரூர்), வாலாஜா (இராணிப்பேட்டை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), நாகப்பட்டினம் தலா 3, திருவாடானை (ராமநாதபுரம்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ஒர்த்தநாடு (தஞ்சாவூர்), கிளாசெருவை (கடலூர்), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), கறம்பக்குடி (புதுக்கோட்டை), கீரனூர் (புதுக்கோட்டை), விழுப்புரம், தளி (கிருஷ்ணகிரி), காட்பாடி (வேலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பேராவூரணி (தஞ்சாவூர்), தலைவாசல் (சேலம்), பரங்கிப்பேட்டை (கடலூர்), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), லக்கூர் (கடலூர்), மன்னார்குடி (திருவாரூர்), கடலூர், மானாமதுரை (சிவகங்கை), சிவகங்கை, சோழிங்கநல்லூர் (சென்னை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), ஆலங்குடி (புதுக்கோட்டை), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), வந்தவாசி (திருவண்ணாமலை), அம்மூர் ((இராணிப்பேட்டை), கிராண்ட் அணைக்கட்டு (தஞ்சாவூர்), பெலாந்துறை (கடலூர்) தலா 2, முகையூர் (விழுப்புரம்), கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), கெட்டி (நீலகிரி), வி.களத்தூர் (பெரம்பலூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), செங்கல்பட்டு, கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), ஆம்பூர் (திருப்பத்தூர்), சின்னக்கள்ளர் (கோயம்புத்தூர்), கல்லக்குடி (திருச்சி), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), பாடலூர் (பெரம்பலூர்), உடையாளிப்பட்டி (புதுக்கோட்டை), வேலூர், KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), இடையப்பட்டி (மதுரை), மதுக்கூர் (தஞ்சாவூர்), பொன்னேரி (திருவள்ளூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), அதனக்கோட்டை (புதுக்கோட்டை), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), வானூர் (விழுப்புரம்), புள்ளம்பாடி (திருச்சி), காங்கேயம் (திருப்பூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), கரூர், சேந்தமங்கலம் (நாமக்கல்), கோவில்பட்டி (தூத்துக்குடி), கரியகோவில் அணை (சேலம்), ஆண்டிபட்டி (மதுரை), வெம்பக்கோட்டை (விருதுநகர்), கிருஷ்ணகிரி, அம்முண்டி (வேலூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), காரியாபட்டி (விருதுநகர்), கொரட்டூர் (திருவள்ளூர்), NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+