சற்றுமுன் வந்த மழை அலர்ட்.. 6 மாவட்டங்களில் மதியம் 1 மணிக்குள் சம்பவம்! பறந்து வந்த வானிலை அறிவிப்பு
சென்னை: அடுத்த 3 மணி நேரம் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான வானிலை அறிக்கையில், "இன்று மதியம் 1 மணிக்குள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம். சாலைகள் வழுக்கும் தன்மையும் இருக்கும். சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். பழுதான கட்டிடங்கள் சேதம் ஆடைவதற்கான வாய்ப்பு உள்ளது." என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக வெளியான அறிவிப்பில், "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது இன்று லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.
20.12.2023 மற்றும் 21.12.2023 : தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22.12.2023 முதல் 25.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
திருச்செந்தூர் (தூத்துக்குடி) 23, காயல்பட்டினம் (தூத்துக்குடி) 21, நாலுமுக்கு (திருநெல்வேலி) 19, காக்காச்சி (திருநெல்வேலி) 18, மாஞ்சோலை (திருநெல்வேலி) 17, ஊத்து (திருநெல்வேலி) 15, மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி) 13, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 12, பாபநாசம் (திருநெல்வேலி) 11, கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி) 9, மணிமுத்தாறு (திருநெல்வேலி) 8, சேர்வலாறு அணை (திருநெல்வேலி), களக்காடு (திருநெல்வேலி) தலா 6, சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 5, கமுதி (ராமநாதபுரம்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), உசிலம்பட்டி (மதுரை), திருநெல்வேலி (திருநெல்வேலி), காரியாப்பட்டி (விருதுநகர்), கல்லிக்குடி (மதுரை) தலா4, கடனா அணை (தென்காசி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), திருமங்கலம் (மதுரை), மண்டபம் (ராமநாதபுரம்), நம்பியாறு அணை (திருநெல்வேலி), திருச்சுழி (விருதுநகர்), குப்பணம்பட்டி (மதுரை), சாத்தூர் (விருதுநகர்) தலா 3, பேரையூர் (மதுரை), தொண்டி (ராமநாதபுரம்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), சண்முகாநதி (தேனி), விருதுநகர் (விருதுநகர்), நாங்குனேரி (திருநெல்வேலி), பரமக்குடி (ராமநாதபுரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), வட்டானம் (ராமநாதபுரம்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), சோத்துப்பாறை (தேனி), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), சங்கரன்கோயில் (தென்காசி), இளையாங்குடி (சிவகங்கை), மிமிசல் (புதுக்கோட்டை), விரகனூர் அணை (மதுரை), எழுமலை (மதுரை), திருப்புவனம் (சிவகங்கை), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), பள்ளமோர்குளம் (ராமநாதபுரம்), கொடைக்கானல் (திண்டுக்கல்) தலா 2, கடலாடி (ராமநாதபுரம்), சிவகாசி (விருதுநகர்), நிலக்கோட்டை (சென்னை), ராதாபுரம் (திருநெல்வேலி), பழனி (திண்டுக்கல்), விருதுநகர் AWS (விருதுநகர்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), ஆண்டிபட்டி (மதுரை), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), பெரியகுளம் (தேனி), மானாமதுரை (சிவகங்கை), குண்டாறு அணை (தென்காசி), திருவாடானை (ராமநாதபுரம்), மணமேல்குடி (புதுக்கோட்டை), வைகை அணை (தேனி), மஞ்சளாறு (தேனி), ஆண்டிபட்டி (தேனி), மதுரை நகரம் (மதுரை), குன்னூர் PTO (நீலகிரி), மதுரை விமானநிலையம் (மதுரை), தேக்கடி (தேனி), குந்தா பாலம் (நீலகிரி), கோடநாடு (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி), மடத்துக்குளம் (திருப்பூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), தேவகோட்டை (சிவகங்கை), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), அரண்மனைப்புதூர் (தேனி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), அமராவதி அணை (திருப்பூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), போடிநாயக்கனூர் (தேனி) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications