Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிக கனமழை பெய்யும்.. கோவை, நீலகிரிக்கு பரபர அலர்ட்! 13 மாவட்டங்களில் கொட்டப்போகுதாம் - ரெடியாகுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், "மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Chennai met announced very heavy rain Kovai and Nilgris and moderate rain in 13 districts

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

6 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 7 மற்றும் 08 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்) 13, சின்கோனா (கோயம்புத்தூர்) 11, வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பாரூர் (கிருஷ்ணகிரி) தலா 8, சோலையாறு (கோயம்புத்தூர்), ஏற்காடு (சேலம்) தலா 7, பார்வூட் (நீலகிரி) 6, வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), மே.மாத்தூர் (கடலூர்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி) தலா 5, குண்டர் அணை (தென்காசி), தேவாலா (நீலகிரி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), காக்காச்சி (திருநெல்வேலி), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), தேக்கடி (தேனி), பெரியார் (தேனி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி) தலா 4, செஞ்சி (விழுப்புரம்), சிவலோகம் (கன்னியாகுமரி), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), செங்கோட்டை (தென்காசி), ஊத்து (திருநெல்வேலி), கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), கடலூர், மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), KRP அணை (கிருஷ்ணகிரி), சிற்றாறு (கன்னியாகுமரி) தலா 3, பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), நடுவட்டம் (நீலகிரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), குடிதாங்கி (கடலூர்), அவலாஞ்சி (நீலகிரி), கொடைக்கானல் (திண்டுக்கல்), டேனிஷ்பேட்டை (சேலம்), போளூர் (திருவண்ணாமலை), புதுச்சேரி,பண்ருட்டி (கடலூர்), கரியக்கோவில் அணை (சேலம்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பாலமோர் (கன்னியாகுமரி), மேல் பவானி (நீலகிரி), ஆர்எஸ்எல்-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பெரியகுளம் AWS (தேனி), ஹாரூர் (தருமபுரி), தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), கடவனூர் (கள்ளக்குறிச்சி), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), வானமாதேவி (கடலூர்), மங்களபுரம் (நாமக்கல்) தலா 2, வடகுத்து (கடலூர்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), சேலம், மஞ்சளார் (தேனி), ராமநதி அணை (தென்காசி), மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி), ஆம்பூர் (திருப்பத்தூர்), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), கடனா அணை (தென்காசி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), விருதாச்சலம் (கடலூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கொத்தவாச்சேரி (கடலூர்), வீரகனூர் (சேலம்), ஆரணி (திருவண்ணாமலை), கருப்பாநதி அணை (தென்காசி), தளி (கிருஷ்ணகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), தருமபுரி PTO, விழுப்புரம், தொழுதூர் (கடலூர்), பாபநாசம் (திருநெல்வேலி), புத்தன் அணை (கன்னியாகுமரி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), வொர்த் எஸ்டேட் செருமுள்ளி (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), சந்தியூர் KVK AWS (சேலம்) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+