அடிச்சு தூள் கிளப்பப்போகும் கனமழை.. 12 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்! சென்னையிலும் ரெடியா இருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கப்போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அந்த 12 மாவட்டங்கள் எவை? விரிவாக பார்ப்போம்.

Chennai Met Department said that possibility of heavy rain in 12 districts in TN

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 30.09.2023 முதல் 04.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கட்டப்பாக்கம் KVK ARG (காஞ்சிபுரம்), சோழிங்கநல்லூர் (சென்னை) 10, ஆரணி (திருவண்ணாமலை) 9, வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), VIT சென்னை (செங்கல்பட்டு) தலா 7, மலர் காலனி (சென்னை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) தலா 6, உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கமுதி (ராமநாதபுரம்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), எச்சன்விடுதி (தஞ்சாவூர்) தலா 5, சோழிங்கநல்லூர் (சென்னை), கொளத்தூர் (சென்னை), அம்பத்தூர் (சென்னை), வானகரம் (சென்னை), அண்ணாநகர் (சென்னை), பெருங்குடி (சென்னை), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), DSCL கீழ்படி (கள்ளக்குறிச்சி), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), காஞ்சிபுரம், ஆயின்குடி (புதுக்கோட்டை), எடப்பாடி (சேலம்), தேவகோட்டை (சிவகங்கை), பயணியர் விடுதி சிவகங்கை, சிவகங்கை, ஆவடி (திருப்பூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), அம்முண்டி (வேலூர்) விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), தலா 4, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), அம்பத்தூர் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), பெரம்பூர் (சென்னை), புழல் (சென்னை), ராயபுரம் (சென்னை), முகலிவாக்கம் (சென்னை), அடையார் (சென்னை), நத்தம் (திண்டுக்கல்), கோடிவேரி (ஈரோடு), KCS மில்-2 கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி), தானியமங்கலம் (மதுரை), சீர்காழி (மயிலாடுதுறை), அறந்தாங்கி (புதுக்கோட்டை), நாகுடி (புதுக்கோட்டை), விராலிமலை (புதுக்கோட்டை), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), வட்டானம் (ராமநாதபுரம்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), டேனிஷ்பேட்டை (சேலம்), தலைவாசல் (சேலம்), காரைக்குடி (சிவகங்கை), மதுக்கூர் (தஞ்சாவூர்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), முத்துப்பேட்டை (திருவாரூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), செய்யார் (திருவண்ணாமலை), போளூர் (திருவண்ணாமலை), காட்பாடி (வேலூர்), வேலூர், அருப்புக்கோட்டை (விருதுநகர்), NIOT பள்ளிக்கரணை (சென்னை), தரமணி ARG (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு) தலா 3, செங்கல்பட்டு, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு), கோடம்பாக்கம் (சென்னை), மாதவரம் (சென்னை), உத்தண்டி (சென்னை), பெருங்குடி (சென்னை), தொண்டி (ராமநாதபுரம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), அம்மாபேட்டை (ஈரோடு), பவானிசாகர் (ஈரோடு), சத்தியமங்கலம் (ஈரோடு), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கள்ளக்குறிச்சி, குன்றத்தூர் (காஞ்சிபுரம்), குளச்சல் (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி), மங்களபுரம் (நாமக்கல்), புதுச்சத்திரம் (நாமக்கல்), குமாரபாளையம் (நாமக்கல்), ராசிபுரம் (நாமக்கல்), சேந்தமங்கலம் (நாமக்கல்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), இலுப்பூர் (புதுக்கோட்டை), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), மின்னல் (ராணிப்பேட்டை), ராணிப்பேட்டை, சொளிங்கர் (ராணிப்பேட்டை), ஆத்தூர் (சேலம்), கரியகோவில் அணை (சேலம்), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), மேலாலத்தூர் (வேலூர்), பொன்னை அணை (வேலூர்), விருதுநகர், YMCA நந்தனம் ARG (சென்னை), திருர் ARG (திருவள்ளூர்) தலா 2, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), ராயபுரம் (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை), மதுரவாயல் (சென்னை), அடையார் (சென்னை), பெருங்குடி (சென்னை), ஆலந்தூர் (சென்னை), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), DSCL சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), சிற்றாறு (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), மதுரை விமானநிலையம் (மதுரை), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), அரிமளம் (புதுக்கோட்டை), கரம்பக்குடி (புதுக்கோட்டை), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), கிளானிலை (புதுக்கோட்டை), மிமிசல் (புதுக்கோட்டை), திருவாடானை (ராமநாதபுரம்), ஆற்காடு (ராணிப்பேட்டை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), வாலாஜா (ராணிப்பேட்டை), ஆனைமடுவு அணை (சேலம்), சங்கரி துர்க்கம் (சேலம்), ஏற்காடு (சேலம்), மானாமதுரை (சிவகங்கை), குருங்குளம் (தஞ்சாவூர்), வல்லம் (தஞ்சாவூர்), பார்வூட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), செருமுள்ளி (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), மஞ்சளாறு (தேனி), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), நீடாமங்கலம் (திருவாரூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), பூண்டி (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வந்தவாசி (திருவண்ணாமலை), குடியாத்தம் (வேலூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில்
இன்று முதல் 30.09.2023 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் இன்று தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.09.2023 மற்றும் 30.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய-வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Chennai Met Department said that possibility of heavy rain in 12 districts in TN

01.10.2023 மற்றும் 02.10.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் இன்று கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
29.09.2023 மற்றும் 30.09.2023: கர்நாடக - கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+