அதிரி புதிரி.. 6 மாவட்டங்களில் கனமழை வெளுத்து எடுக்கப்போகுது! சென்னையில் இதான் நிலவரம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26.11.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27.11.2023 முதல் 01.12.2023 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மண்டலம் 13 அடையார் (சென்னை) 8, தரமணி ARG (சென்னை) 7, அடையாறு (சென்னை) 6, மண்டலம் 13 U39 அடையார் (சென்னை), புவனகிரி (கடலூர்), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), எறையூர் (பெரம்பலூர்), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை) 5 தலா, தொழுதூர் (கடலூர்), பெருங்குடி (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), மண்டலம் 14 பெருங்குடி (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை) 4 தலா, மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), சென்னை (N) AWS (சென்னை), வேப்பூர் (கடலூர்), சென்னை (N) AWS (சென்னை), சேத்தியாத்தோப்பு (கடலூர்), ஆனைமடுவு அணை (சேலம்), விழுப்புரம் (விழுப்புரம்), தேனாம்பேட்டை (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), கிளானிலை (புதுக்கோட்டை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), ஆலந்தூர் (செங்கல்பட்டு), நீடாமங்கலம் (திருவாரூர்), பொன்னேரி (திருவள்ளூர்), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), NIOT_பள்ளிக்கரணை ARG (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), BASL முகையூர் (விழுப்புரம்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), அம்பத்தூர் (சென்னை), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), கொத்தவாச்சேரி (கடலூர்) தலா 3, மண்டலம் 05 GCC (சென்னை), மண்டலம் 12 D156 முகலிவாக்கம் (சென்னை), சோளிங்கர் (ராணிப்பேட்டை), பரங்கிப்பேட்டை (கடலூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), வடகுத்து (கடலூர்), தண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), வேலூர் (வேலூர்), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), தொண்டி (ராமநாதபுரம்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), பஞ்சப்பட்டி (கரூர்), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), ஏற்காடு (சேலம்), சோழவரம் (திருவள்ளூர்), சிதம்பரம் (கடலூர்), திருமானூர் (அரியலூர்), கொளப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), புதுச்சத்திரம் (நாமக்கல்), பெரம்பலூர் (பெரம்பலூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), மஞ்சளாறு (தேனி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), ஆலந்தூர் (சென்னை), திரு.வி.க நகர் (சென்னை), மரக்காணம் (விழுப்புரம்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 2, மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), துறையூர் (திருச்சிராப்பள்ளி), ஒகேனக்கல் (தர்மபுரி), போளூர் (திருவண்ணாமலை), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), மண்டலம் 02 மணலி (சென்னை), கீழச்செருவை (கடலூர்), சிதம்பரம் AWS (கடலூர்), மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), பூதலூர் (தஞ்சாவூர்), களக்காடு (திருநெல்வேலி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), வளசரவாக்கம் (சென்னை), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), தழுதலை (பெரம்பலூர்), ஊத்து (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), குப்பநத்தம் (கடலூர்), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), சத்தியமங்கலம் (ஈரோடு), கல்லந்திரி (மதுரை), ஆரணி (திருவண்ணாமலை), செஞ்சி (விழுப்புரம்), லக்கூர் (கடலூர்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), எண்ணூர் AWS (சென்னை), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), பாபநாசம் (திருநெல்வேலி), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), திண்டிவனம் (விழுப்புரம்), வாடிப்பட்டி (மதுரை), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), சோழிங்கநல்லூர் (சென்னை), காட்டுமயிலூர் (கடலூர்), செய்யார் (திருவண்ணாமலை), கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), வீரகனூர் (சேலம்), நாங்குனேரி (திருநெல்வேலி), மீ மாத்தூர் (கடலூர்), விருதாச்சலம் KVK AWS (கடலூர்), பொன்னை அணை (வேலூர்), ராதாபுரம் (திருநெல்வேலி), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), கொரட்டூர் (திருவள்ளூர்), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), RSCL வல்லம் (விழுப்புரம்), சோழிங்கநல்லூர் (சென்னை), மண்டலம் 03 புழல் (சென்னை), குடிமியான்மலை (புதுக்கோட்டை), கோடியக்கரை (மயிலாடுதுறை), கே.எம்.கோயில் (கடலூர்), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), திருப்போரூர் (செங்கல்பட்டு), மைலாடி (கன்னியாகுமரி), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), வனமாதேவி (கடலூர்), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), பெலாந்துறை (கடலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), சிவகிரி (தென்காசி), கோடிவேரி (ஈரோடு), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), பூந்தமல்லி (திருவள்ளூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), KCS மில்-2 மூரர்பாளையம் (கள்ளக்குறிச்சி), கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), செங்குன்றம் (திருவள்ளூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), செய்யூர் (செங்கல்பட்டு) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications