மழை+வெயில்.. குழப்பியடிக்கும் வானிலை! தமிழகத்தில் அடுத்த 1 வாரத்திற்கு இதுதான் நிலைமை
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், சில இடங்களில் வெயில் அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று 10க்கும் அதிகமான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்திருந்தது. அதே நேரம் சில இடங்களில் லேசான மழையும் பெய்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பை பொறுத்தவரை பல இடங்களில் மழை பெய்திருக்கிறது. குறிப்பாக
மழை நிலவரம்(சென்டிமீட்டரில்):
- உதகமண்டலம் (நீலகிரி) 3,
- சங்கரன்கோயில் (தென்காசி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கூடலூர் (தேனி), சிவகாசி (விருதுநகர்), தேக்கடி (தேனி), உத்தமபாளையம் (தேனி) தலா 2,
- கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), பாலமோர் (கன்னியாகுமரி), ஏற்காடு (சேலம்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி), உபாசி TRF AWS (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்) தலா 1 என மழை பதிவாகியிருக்கிறது.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 40.2° செல்சியஸ் வெயில் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 23.0° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 1-2° செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-40° செல்சியஸ், வட தமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-38° செல்சியஸ், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 34-36° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 22-28° செல்சியஸ் பதிவாகியுள்ளது .
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே, 25-04-2025 மற்றும் 26-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27-04-2025 முதல் 01-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, 25-04-2025 முதல் 29-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை, 25-04-2025 முதல் 27-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
28-04-2025 மற்றும் 29-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
25-04-2025 மற்றும் 26-04-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (25-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (26-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள் & வங்கக்கடல் பகுதிகளில் 25-04-2025 முதல் 29-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகளில் 25-04-2025 மற்றும் 26-04-2025: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள பகுதிகள், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27-04-2025 முதல் 29-04-2025 வரை எச்சரிக்கை ஏதுமில்லை. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications