Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிச்சு தூக்கப்போகுது.. 3 மாவட்டங்களுக்கு மின கனமழை ஆரஞ்சு அலர்ட்! 10 மாவட்டங்களில் கனமழை வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மின கனமழையும், 10 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 Chennai met gave Very heavy rain alert in 3 districts and heavy rain alert in 10 districts

நீலகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28.09.2023 மற்றும் 29.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30.09.2023 மற்றும் 01.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): குடியாத்தம் (வேலூர்) 12, திருவண்ணாமலை, மேலாலத்தூர் (வேலூர்) தலா 10, சோழிங்கநல்லூர் (சென்னை), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 7, மதுராந்தகம் (செங்கல்பட்டு), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) தலா 6, தாம்பரம் (செங்கல்பட்டு), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), மலர் காலனி (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), கல்லிக்குடி (மதுரை), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), எடப்பாடி (சேலம்), மதுக்கூர் (தஞ்சாவூர்), திருப்பத்தூர், பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருவள்ளூர், காட்பாடி (வேலூர்), செஞ்சி (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்) தலா 5, மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), செய்யூர் (செங்கல்பட்டு), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), அண்ணாநகர் (சென்னை), உத்தண்டி (சென்னை), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), சொளிங்கர் (ராணிப்பேட்டை), கொரட்டூர் (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), செங்கம் (திருவண்ணாமலை), வேலூர் தலா 4, CD மருத்துவமனை தண்டையார் பேட்டை (சென்னை), பெரம்பூர் (சென்னை), மாதவரம் (சென்னை), காட்டுப்பாக்கம KVK AWS (காஞ்சிபுரம்), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), ஆற்காடு (ராணிப்பேட்டை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), ராணிப்பேட்டை, வாலாஜா (ராணிப்பேட்டை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), குருங்குளம் (தஞ்சாவூர்), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), ஆவடி (திருப்பூர்), சோழவரம் (திருவள்ளூர்), செய்யார் (திருவண்ணாமலை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), வந்தவாசி (திருவண்ணாமலை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), RSCL வல்லம் (விழுப்புரம்) தலா 3, VIT சென்னை AWS (செங்கல்பட்டு), மீனம்பாக்கம் AWS (சென்னை), செங்கல்பட்டு, ஆலந்தூர் (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை), (சென்னை), கொளத்தூர் (சென்னை), திரு.வி.கே.நகர் (சென்னை), அம்பத்தூர் (சென்னை), முகலிவாக்கம் (சென்னை), பெருங்குடி (சென்னை), அம்மாபேட்டை (ஈரோடு), மொடக்குறிச்சி (ஈரோடு), காஞ்சிபுரம், ஆர்.கே.பேட்டை ARG (திருவள்ளூர்), சூலகிரி (கிருஷ்ணகிரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), மேட்டூர் (சேலம்), ஏற்காடு (சேலம்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), பொன்னேரி (திருவள்ளூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), போளூர் (திருவண்ணாமலை), ஆரணி (திருவண்ணாமலை), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), சென்னை விமான நிலையம் தலா 2, அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), தரமணி ARG (சென்னை), அம்பத்தூர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), வளசரவாக்கம் (சென்னை), அடையார் (சென்னை), அடையார் (சென்னை), பெருங்குடி (சென்னை), ஆலந்தூர் (சென்னை), மீனம்பாக்கம் (சென்னை), அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), கொடைக்கானல் (திண்டுக்கல்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), கொளப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), கிருஷ்ணகிரி, வாடிப்பட்டி (மதுரை), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), ஆலங்குடி (புதுக்கோட்டை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), கீரனூர் (புதுக்கோட்டை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), மின்னல் (ராணிப்பேட்டை), ஆனைமடுவு அணை (சேலம்), ஓமலூர் (சேலம்), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), பூந்தமல்லி (திருவள்ளூர்), பூண்டி (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), பொன்னை அணை (வேலூர்), அம்முண்டி (வேலூர்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் 28.09.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் 25.09.2023: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26.09.2023: எச்சரிக்கை ஏதுமில்லை.

27.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

28.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+