Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டைய கிளப்பபோகுது மழை.. 10 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்! சென்னைக்கும் வானிலை ஆய்வு மையம் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Chennai Met has informed that there is a possibility of heavy rain in 10 districts

விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28.09.2023 முதல் 30.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

01.10.2023 மற்றும் 02.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Chennai Met has informed that there is a possibility of heavy rain in 10 districts

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பெருந்துறை (ஈரோடு), நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) தலா 7, செய்யார் (திருவண்ணாமலை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை) தலா 6, சத்யபாமா பல்கலைகழகம் ARG (காஞ்சிபுரம்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), செட்டிகுளம் (பெரம்பலூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்) தலா 5, மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), லக்கூர் (கடலூர்), பாரூர் (கிருஷ்ணகிரி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), நாமக்கல் (நாமக்கல்), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), துறையூர் (திருச்சிராப்பள்ளி), திருவாரூர் (திருவாரூர்), பூண்டி (திருவள்ளூர்) தலா 4, காஞ்சிபுரம், மதுராந்தகம் (செங்கல்பட்டு), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), தொழுதூர் (கடலூர்), அரூர் (தர்மபுரி), இந்துஸ்தான் பல்கலைகழகம் ARG (காஞ்சிபுரம்), KCS மில்-2 கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), பரமத்திவேலூர் (நாமக்கல்), திருச்செங்கோடு (நாமக்கல்), பெரம்பலூர், ஆற்காடு (ராணிப்பேட்டை), ஆர்.கே.பேட்டை ARG (திருவள்ளூர்), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), ராணிப்பேட்டை, நந்தியாறு (திருச்சிராப் பள்ளி), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), நன்னிலம் (திருவாரூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), அம்முண்டி (வேலூர்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) தலா 3, அரியலூர், கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), தாம்பரம் (செங்கல்பட்டு), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு), கடலூர், வனமாதேவி (கடலூர்), அம்மாபேட்டை (ஈரோடு), சென்னிமலை (ஈரோடு), ஈரோடு, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), காட்டுப்பாக்கம KVK AWS (காஞ்சிபுரம்), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), மாயனூர் (கரூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), தழுதலை (பெரம்பலூர்), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), மின்னல் (ராணிப்பேட்டை), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), திருவையாறு (தஞ்சாவூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), திருச்சிராப்பள்ளி விமான நிலையம், கொடவாசல் (திருவாரூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), வலங்கைமான் (திருவாரூர்), சோழவரம் (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), போளூர் (திருவண்ணாமலை), ஆரணி (திருவண்ணாமலை), வந்தவாசி (திருவண்ணாமலை), காட்பாடி (வேலூர்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்) தலா 2, சிதம்பரம் AWS (கடலூர்), செய்யூர் (செங்கல்பட்டு), அண்ணாமலை நகர் (கடலூர்), பண்ருட்டி (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), கொடுமுடி (ஈரோடு), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), KCS மில்-2 முரார்பாளையம் (கள்ளக்குறிச்சி), ஓசூர் (கிருஷ்ணகிரி), தல்லி (கிருஷ்ணகிரி), எருமப்பட்டி (நாமக்கல்), மங்களபுரம் (நாமக்கல்), மோகனூர் (நாமக்கல்), ராசிபுரம் (நாமக்கல்), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), பாடலூர் (பெரம்பலூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), சொளிங்கர் (ராணிப்பேட்டை), வாலாஜா (ராணிப்பேட்டை), சங்கரி துர்க்கம் (சேலம்), தலைவாசல் (சேலம்), திருப்புவனம் (சிவகங்கை), கல்லணை (தஞ்சாவூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), லால்குடி (திருச்சிராப்பள்ளி), முசிறி (திருச்சிராப்பள்ளி), தாதியங்கர்பேட்டை (திருச்சிராப்பள்ளி), துவாக்குடி (திருச்சிராப்பள்ளி), திருச்சிராப்பள்ளி நகரம், வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி), பொன்னேரி (திருவள்ளூர்), செங்குன்றம் (திருவள்ளூர்), திருவண்ணாமலை, குடியாத்தம் (வேலூர்), பொன்னை அணை (வேலூர்), வேலூர், செஞ்சி (விழுப்புரம்), RSCL-2 கெடார் (விழுப்புரம்), RSCL வல்லம் (விழுப்புரம்), வானூர் (விழுப்புரம்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் 29.09.2023 மற்றும் 30.09.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் 26.09.2023 மற்றும் 27.09.2023: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

28.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.09.2023 மற்றும் 30.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+