Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காத்துல “ட்ரிஃப்ட்”.. பொளந்து கட்டப்போகுது கனமழை! இந்தாங்க 15 மாவட்டங்களின் லிஸ்ட் -சென்னையுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 Chennai met said that Possibility of heavy rain in 15 districts of Tamil Nadu

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

19.09.2023 மற்றும் 20.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

21.09.2023 முதல் 23.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): திண்டிவனம் (விழுப்புரம்), திருத்தணி (திருவள்ளூர்) தலா 13, மரக்காணம் (விழுப்புரம்) 11, RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்) தலா 8, RSCL-2 நேமூர் (விழுப்புரம்), ஆற்காடு (ராணிப்பேட்டை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), அம்பத்தூர் (சென்னை), வாலாஜா (ராணிப்பேட்டை), பூண்டி (திருவள்ளூர்), கத்திவாக்கம் (சென்னை), திருவள்ளூர், திருத்தணி PTO (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), ராணிப்பேட்டை, தலா 7, வெம்பாக்கம் (திருவண்ணாமலை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), பெரம்பூர் (சென்னை), செய்யூர் (செங்கல்பட்டு), RSCL வல்லம் (விழுப்புரம்), வளசரவாக்கம் (சென்னை), பள்ளிக்கரனை ARG (சென்னை) தலா 6, வந்தவாசி (திருவண்ணாமலை), அண்ணாநகர் (சென்னை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), டிஜிபி அலுவலகம் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), மதுரவாயல் (சென்னை), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), மலர்காலனி (சென்னை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), சோழவரம் (திருவள்ளூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), கோடம்பாக்கம் (சென்னை), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), VIT சென்னை AWS, YMCA நந்தனம் ARG (சென்னை), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்) தலா 5, சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), பெருங்குடி (சென்னை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), அம்முண்டி (வேலூர்), CD மருத்துவமனைதண்டையார்பேட்டை (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருவொற்றியூர் (சென்னை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), செய்யார் (திருவண்ணாமலை), வானூர் (விழுப்புரம்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), செங்குன்றம் (திருவள்ளூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), மேலாலத்தூர் (வேலூர்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), எம்ஜிஆர்நகர் (சென்னை), புதுக்கோட்டை, புதுச்சேரி தலா 4, ஆரணி (திருவண்ணாமலை), சென்னை விமான நிலையம் போளூர் (திருவண்ணாமலை), ராயபுரம் (சென்னை), காஞ்சிபுரம், ஆலந்தூர் (சென்னை), பாலாறுஅணைக்கட்டு (ராணிப்பேட்டை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), முகலிவாக்கம் (சென்னை), காட்பாடி (வேலூர்), அண்ணாபல்கலைக்கழகம் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), கொளத்தூர் (சென்னை), பெருங்குடி (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), வானகரம் (சென்னை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), தண்டையார்பேட்டை (சென்னை), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), ஆவடி (திருப்பூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), RSCL-2 கெடார் (விழுப்புரம்), வேலூர், செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), செங்கல்பட்டு, செஞ்சி (விழுப்புரம்), திருப்போரூர் (செங்கல்பட்டு), மணலி (சென்னை), அடையார் (சென்னை), பொன்னை அணை (வேலூர்), குழித்துறை (கன்னியாகுமரி), திரு.வி.கே.நகர் (சென்னை), குடியாத்தம் (வேலூர்), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), மீனம்பாக்கம் (சென்னை), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு) தலா 3, தலைவாசல் (சேலம்), கொரட்டூர் (திருவள்ளூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), கோடம்பாக்கம் (சென்னை), ஆலங்காயம் (திருப்பத்தூர்), விழுப்புரம், சொளிங்கர் (ராணிப்பேட்டை), களியல் (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), பரங்கிப்பேட்டை (கடலூர்), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பெருஞ்சாணிஅணை (கன்னியாகுமரி), பொன்னேரி (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), சுரலாகோடு (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மணலி (சென்னை), புழல் (சென்னை), ஆலந்தூர் (செங்கல்பட்டு), புழல் ARG (செங்கல்பட்டு) மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) தலா 2, RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), கொத்தவாச்சேரி (கடலூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), குறிஞ்சிப்பாடி (கடலூர்), ஊத்து (திருநெல்வேலி), கொட்டாரம் (கன்னியாகுமரி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), தண்டையார்பேட்டை (சென்னை), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), செங்கம் (திருவண்ணாமலை), கோடியக்கரை (மயிலாடுதுறை), சோலையார் (கோயம்புத்தூர்), கடலூர், காட்டுமயிலூர் (கடலூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), நத்தம் (திண்டுக்கல்), முக்கடல் அணை (கன்னியாகுமரி), பண்ருட்டி (கடலூர்), டேனிஷ்பேட்டை (சேலம்), தேவாலா (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), அணைகெடங்கு (கன்னியாகுமரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), மின்னல் (ராணிப்பேட்டை), இரணியல் (கன்னியாகுமரி), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வேப்பூர் (கடலூர்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), சிதம்பரம் (கடலூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 1

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் இன்று இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

18.09.2023: தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகளில் இன்று கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+