தெறிக்கவிடப்போகும் கனமழை.. இன்று 13 மாவட்டங்களுக்கு அலர்ட்! சென்னையிலும் இடி மின்னலுடன் மழை இருக்கு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து நேற்று வெளியான அறிக்கையில், "இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 30.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 31.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

01.11.2023 மற்றும் 02.11.2023: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03.11.2023 மற்றும் 04.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) 7, கடலாடி (ராமநாதபுரம்), குளச்சல் (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி) தலா 6, மண்டபம் (ராமநாதபுரம்), பரமக்குடி (ராமநாதபுரம்) தலா 4, தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை), வட்டானம் (ராமநாதபுரம்) தலா 3, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), காயல்பட்டினம் (தூத்துக்குடி), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஆவடி (திருவள்ளூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), திருவாரூர், கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), கயத்தார் (தூத்துக்குடி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), சத்யபாமா பல்கலை ARG (காஞ்சிபுரம்), காரைக்கால், மகாபலிபுரம் (செங்கல்பட்டு), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), நாங்குனேரி (திருநெல்வேலி) தலா 2, காஞ்சிபுரம், தாம்பரம் (செங்கல்பட்டு), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), செய்யூர் (செங்கல்பட்டு), RSCL-2 கெடார் (விழுப்புரம்), வனமாதேவி (கடலூர்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), கமுதி (ராமநாதபுரம்), கரம்பக்குடி (புதுக்கோட்டை), மன்னார்குடி (திருவாரூர்), திருவையாறு (தஞ்சாவூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), மண்டலம்1 U32 மதுரவாயல் (சென்னை), தரமணி ARG (சென்னை), பாலமோர் (கன்னியாகுமரி), நாகப்பட்டினம், திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), குன்னூர் PTO (நீலகிரி), பொன்னை அணை (வேலூர்), மண்டலம்5 சோழிங்கநல்லூர் (சென்னை), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), செங்கோட்டை (தென்காசி), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), குன்னூர் (நீலகிரி), பேராவூரணி (தஞ்சாவூர்), கொடுமுடி (ஈரோடு), பர்லியார் (நீலகிரி), அம்பத்தூர் (சென்னை), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), ராதாபுரம் (திருநெல்வேலி), மண்டலம்3 அடையார் (சென்னை), அதிராமபட்டினம் AWS (தஞ்சாவூர்), லால்குடி (திருச்சிராப்பள்ளி), தென்காசி, பொன்னேரி (திருவள்ளூர்), மண்டலம்4 U41 பெருங்குடி (சென்னை), அழகரை எஸ்டேட் (நீலகிரி), மணமேல்குடி (புதுக்கோட்டை), மண்டலம்3 U39 அடையார் (சென்னை), தக்கலை (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), களக்காடு (திருநெல்வேலி), அரியலூர் PTO, தொண்டி (ராமநாதபுரம்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), தொழுதூர் (கடலூர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), சிதம்பரம் (கடலூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.
மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்!












Click it and Unblock the Notifications