Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இருக்கு.. இன்னைக்கு சம்பவம் இருக்கு! 13 மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது - வானிலை மையம் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Chennai met warned that possibility of heavy rain in 13 districts of Tamil Nadu today

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24.09.2023 மற்றும் 25.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26.09.2023 மற்றும் 27.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): திருப்பத்தூர் PTO 10, ஆற்காடு (ராணிப்பேட்டை), போளூர் (திருவண்ணாமலை) தலா 9, செய்யார் (திருவண்ணாமலை) 8, ராணிப்பேட்டை, ஆரணி (திருவண்ணாமலை) தலா 7, வத்திராயிருப்பு (விருதுநகர்) 6, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை) தலா 5, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), வாலாஜா (ராணிப்பேட்டை), மேட்டூர் (சேலம்), கடம்பூர் (தூத்துக்குடி) தலா 4, மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஒகேனக்கல் (தர்மபுரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பாலமோர் (கன்னியாகுமரி), பஞ்சப்பட்டி (கரூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), எடப்பாடி (சேலம்), இளையங்குடி (சிவகங்கை), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு)தலா 3, சென்னை விமான நிலையம், திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சிதம்பரம் (கடலூர்), விருதாச்சலம் (கடலூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), மயிலம்பட்டி (கரூர்), பாரூர் (கிருஷ்ணகிரி), ஏழுமலை (மதுரை), சாதியார் (மதுரை), புதுச்சத்திரம் (நாமக்கல்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), நாங்குனேரி (திருநெல்வேலி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), VIT சென்னை AWS (சென்னை), NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை), YMCA நந்தனம் ARG (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) தலா 2, சந்தியூர் KVK AWS (சேலம்), புழல் ARG (திருவள்ளூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), பாலக்கோடு (தர்மபுரி), பென்னாகரம் (தர்மபுரி), நிலக்கோட்டை (சென்னை), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), காஞ்சிபுரம்,, வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), கன்னிமார் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சுருலக்கோடு (கன்னியாகுமரி), குளித்தலை (கரூர்), பரமக்குடி (ராமநாதபுரம்), மின்னல் (ராணிப்பேட்டை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), கங்கவல்லி (சேலம்), ஓமலூர் (சேலம்), மஞ்சளாறு (தேனி), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), காக்கச்சி (திருநெல்வேலி), களக்காடு (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), திருப்பத்தூர், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), வேலூர், பொன்னை அணை (வேலூர்), அம்முண்டி (வேலூர்) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+