படபடவென கொட்டப்போகுது கனமழை.. வெளியான 13 மாவட்டங்களின் லிஸ்ட்! சென்னையில உலகக்கோப்பை வேற இருக்கே
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 08.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

09.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10.10.2023 மற்றும் 11.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
12.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.10.2023 மற்றும் 14.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
ஏழுமலை (மதுரை) 10, பரமக்குடி (ராமநாதபுரம்) 6, புகையிலை நிலையம் (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்), சூலகிரி (கிருஷ்ணகிரி), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), பேரையூர் (மதுரை), வாலாஜா (ராணிப்பேட்டை), அம்முண்டி (வேலூர்) தலா 5, ஆலந்தூர் (சென்னை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), குடிமியான்மலை (புதுக்கோட்டை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை) தலா 4, அம்பத்தூர் (சென்னை), வளசரவாக்கம் (சென்னை), தர்மபுரி, வி.களத்தூர் (பெரம்பலூர்), ஆவடி (திருவள்ளூர்), விருதுநகர், வத்திராயிருப்பு (விருதுநகர்), விருதுநகர் AWS தலா 3, வளசரவாக்கம் (சென்னை), மதுரவாயல் (சென்னை), அடையார் (சென்னை), வேப்பூர் (கடலூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), அரவக்குறிச்சி (கரூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), கல்லந்திரி (மதுரை), கல்லிக்குடி (மதுரை), திருமயம் (புதுக்கோட்டை), சிவகங்கை, ஆண்டிபட்டி (தேனி), சோழவரம் (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 2, அம்பத்தூர் (சென்னை), வானகரம் (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), பெருங்குடி (சென்னை), தரமணி ARG (சென்னை), விருதாச்சலம் KVK AWS (கடலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), தல்லி (கிருஷ்ணகிரி), கமுதி (ராமநாதபுரம்), ராணிப்பேட்டை, மேட்டூர் (சேலம்), சிங்கம்புணரி (சிவகங்கை), திருப்பத்தூர் (சிவகங்கை), வைகை அணை (தேனி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications