கியர் மாறுதே.. விளாசப்போகுது கனமழை! 7 மாவட்டங்களுக்கு அலர்ட் - சென்னையிலும் சம்பவம் காத்திருக்கு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

03.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04.10.2023 முதல் 08.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): நாலுமுக்கு (திருநெல்வேலி) 11, ஊத்து (திருநெல்வேலி) 10, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), பாலமோர் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), குண்டாறு அணை (தென்காசி), காக்கச்சி (திருநெல்வேலி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 7, சின்கோனா (கோயம்புத்தூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 6, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), பெரியாறு (தேனி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 5, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சுரலாகோடு (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 4, சோலையார் (கோயம்புத்தூர்), அடையாமடை (கன்னியாகுமரி), சித்தார் (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி), அவலாஞ்சி (நீலகிரி), தேவாலா (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 3, சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), கன்னியாகுமரி, திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), புதுச்சேரி, ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), அடவினனார்கோயில் அணை (தென்காசி), செங்கோட்டை (தென்காசி), தேக்கடி (தேனி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), செஞ்சி (விழுப்புரம்) தலா 2, வரட்டுப்பள்ளம் (ஈரோடு), பாப்பாரப்பட்டி Kvk AWS (தர்மபுரி), KCS மில்- மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), பரூர் (கிருஷ்ணகிரி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), கடனா அணை (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி), பார்வூட் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), RSCL-2 கேதார் (விழுப்புரம்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்), வானூர் (விழுப்புரம்) தலா 1.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications