தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை மையம் வெளியிட்ட அப்டேட்
சென்னை: தமிழகத்தில் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானிலை நிலவரம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பூமத்திய ரேகையை ஒட்டிய, இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இருந்து தமிழகம் வரை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வரும், 12ம் தேதி வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. உள்மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலை காணப்படும்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் காலை வேளையில், லேசான பனி மூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில், இரவு நேரத்தில் சில இடங்களில் உறைபனி நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்
நாளை (ஜனவரி 8) கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஜனவரி 9ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜனவரி 10ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 11ஆம் தேதி தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜனவரி 12ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று (ஜனவரி 7) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications