தமிழகம், புதுவையில் இன்று வரை அதிக வெப்ப நிலை! எச்சரிக்கும் வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று வரை அதிக வெயில் இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 24 ஆம் தேதி முதல் 29-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் 24 ஆம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
23ஆம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, இரணியல், திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முதியவர்கள், குழந்தைகளுடன் செல்லும் தாய்மார்கள் கையில் தண்ணீர் பாட்டிலும் குடையையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள், முடிந்தவரை வெயில் அதிகரிக்கும் நேரமான பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் தலைக்காட்டாமல் இருப்பது நல்லது.
தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரிக்கவும். லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளை சாப்பிடவும். தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.
வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். வெளிர் நிற இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும். தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும். சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால் நிழலில் செல்லவும்.
தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும். வயதானவர்கள், குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும். நெல்லை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலையும் ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இயல்பை விட குறைந்த வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications