படபடன்னு கொட்டப்போகுது கனமழை.. 10 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்! லிஸ்ட்ல சென்னையும் இருக்கே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Chennai Meteorological Dept warned that there is a possibility of heavy rain in 10 districts

21.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

22.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

23.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

24.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25.11.2023 மற்றும் 26.11.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி) 16, சாத்தான்குளம் (தூத்துக்குடி) 12, திருச்செந்தூர் (தூத்துக்குடி) 11, காயல்பட்டினம் (தூத்துக்குடி), ஊத்து (திருநெல்வேலி) தலா 9, சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), காக்காச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 8, திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), ராதாபுரம் (திருநெல்வேலி), கடலாடி (ராமநாதபுரம்), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 7, களக்காடு (திருநெல்வேலி), ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி), நாங்குனேரி (திருநெல்வேலி) தலா 6, மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), மணியாச்சி (தூத்துக்குடி), சூரங்குடி (தூத்துக்குடி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) தலா 5, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), நம்பியாறு அணை (திருநெல்வேலி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 4,
வைப்பாறு (தூத்துக்குடி), விளாத்திகுளம் (தூத்துக்குடி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), வேதநாதம் (தூத்துக்குடி), கன்னியாகுமரி, ராமநாதபுரம், பாம்பன் (ராமநாதபுரம்), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கொட்டாரம் (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), மண்டபம் (ராமநாதபுரம்), கீழஅரசடி (தூத்துக்குடி) தலா 3, திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), கோடியக்கரை (மயிலாடுதுறை), பாபநாசம் (திருநெல்வேலி), புத்தன் அணை (கன்னியாகுமரி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), சிற்றாறு-I (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி) தலா 2, பாலமோர் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), திற்பரப்பு (கன்னியாகுமரி), கடம்பூர் (தூத்துக்குடி), திருநெல்வேலி, களியல் (கன்னியாகுமரி), ராமநதி அணைப்பகுதி (தென்காசி), கடனா அணை (தென்காசி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), கயத்தார் (தூத்துக்குடி), கடல்குடி (தூத்துக்குடி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), எட்டயபுரம் (தூத்துக்குடி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), மண்டலம்2 D156 முகலிவாக்கம் (சென்னை), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), குழித்துறை (கன்னியாகுமரி), அம்பத்தூர் (சென்னை), சுருளக்கோடு (கன்னியாகுமரி), எம்ஜிஆர் நகர் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்), கமுதி ARG (ராமநாதபுரம்), கமுதி (ராமநாதபுரம்), கன்னிமார் (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+