டிசம்பர் 16ல் புதிய காற்றழுத்தம்! எங்கெல்லாம் மழை பெய்யும்? வானிலை மையம் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். இதைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் (டிச.16) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்​தில் வடகிழக்​குப் பருவமழை மிக தீவிரமாக உள்ளது. பெரும்​பாலான இடங்​களில் கனமழை பெய்​துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதிவான மழை அளவு​களின்படி 29 இடங்​களில் அதிக​னமழை​யும், 81 இடங்​களில் மிக கனமழை​யும், 16 இடங்​களில் கனமழை​யும் பெய்​துள்ளது.

weather rain tamil nadu

அதிகபட்​சமாக திருநெல்​வேலி மாவட்டம் ஊத்து பகுதி​யில் 54 செ.மீ., அம்பாச​முத்​திரம், தூத்​துக்​குடி மாவட்டம் கோவில்​பட்​டி​யில் 37, திருநெல்​வேலி மாவட்டம் கன்னடயன் அணைக்​கட்டு, காக்​காச்​சி​யில் தலா 35, மாஞ்​சோலை​யில் 32, தென்​காடி மாவட்டம் ஆயிக்​குடி, திருநெல்​வேலி மாவட்டம் நாலு​முக்கு, கடலூர் மாவட்டம் லால்​பேட்டை ஆகிய இடங்​களில் 31 செ.மீ. மழை பதிவாகி​யுள்​ளது.

தமிழகத்​தில் கடந்த அக். 1 முதல் டிச. 13 வரை 54 செ.மீ. மழை பதிவாகி​யுள்​ளது. இந்த காலகட்​டத்​தில் வழக்​கமாக 40 செ.மீ. மழை பெய்​யும். இந்த ஆண்டு வழக்​கத்​தைவிட 32 சதவீதம் அதிகமாக மழை பெய்​துள்ளது. டிச. 12-ம் தேதி வரை 16 சதவீதம் மட்டுமே மழை அதிகமாக இருந்​தது. ஒரே நாளில் 16 சதவீதம் கூடு​தலாக மழை கிடைத்​துள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதி​களில் நிலவிய காற்​றழுத்த தாழ்வு பகுதி, லட்சத்​தீவு மற்றும் மாலத்​தீவு பகுதி​களில் நிலவு​கிறது. இது மேற்கு திசை​யில் நகர்ந்து, வலுவிழக்கக் கூடும். தெற்கு அந்த​மான் கடல் பகுதி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று நிலவும். இதன் காரணமாக வரும் 16-ம் தேதி ஒரு காற்​றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்​கூடும். இது மேற்கு மற்றும் வடமேற்கு திசை​யில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரலாம். இதன் காரணமாக தமிழகம், புதுச்​சேரி​யில் இன்றும், நாளை​யும் ஓரிரு இடங்​களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். வரும் 16, 17, 18-ம் தேதி​ களில் பரவலாக​வும், 19-ம் தேதி சில இடங்​களி​லும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

வரும் 16-ம் தேதி தஞ்சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயிலாடு​துறை, ராமநாத​புரம், புதுக்​கோட்டை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகுதி​யிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்​ளது. வரும் 17-ம் தேதி கடலூர், மயிலாடு​துறை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகுதி​யிலும் கன முதல் மிக கனமழை​யும், தஞ்சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், விழுப்பு​ரம், அரியலூர், பெரம்​பலூர், கள்ளக்​குறிச்சி, புதுக்​கோட்டை, திருச்சி, செங்​கல்​பட்டு மாவட்​டங்​களி​லும், புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்புள்​ளது.

வரும் 18-ம் தேதி டெல்டா மாவட்​டங்​கள், கடலூர், விழுப்பு​ரம், அரியலூர், பெரம்​பலூர், கள்ளக்​குறிச்சி, செங்​கல்​பட்டு, திரு​வண்ணா​மலை, காஞ்​சிபுரம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக்​கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகுதி​களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்​ளது.

தமிழக கடலோரப் பகுதி​கள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்​கடல் பகுதி​களில் வரும் 17-ம் தேதி அதிகபட்​சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக் ​காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம் என்று அறி​வுறுத்​தப்​படு​கிறார்​கள். இவ்​வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+