பொய்த்துப்போன காற்றழுத்த தாழ்வு மையம்.. சென்னை எஸ்கேப் ஆனது? அப்டேட் கொடுத்த வெதர்மேன்
சென்னை: வடகிழக்கு பருவமழையின்போது, காற்றழுத்த தாழ்வு மையம்தான் மழையை கொண்டு வரும். ஆனால் நவம்பர் இறுதி வரை காற்றழுத்த தாழ்வு மையம் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு. அல்லது, உருவானாலும் அது சென்னையை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே சென்னை கனமழை பாதிப்பிலிருந்து தப்பித்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் சில மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தனது x தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதிதான் மழையை கொண்டு வரும். ஆனால் நாம் தற்போது வெப்பச்சலன மழையை நம்பியிருக்கிறோம். இது கொடுமையா விஷயம்தான். கடந்த 2 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பகலில் கடும் வெயிலும், மாலையில் இடி மின்னலுடன் மழையும் பெய்து வருகிறது.

மழை மேகங்களின் அளவு குறைவாக இருப்பதால் சில இடங்களில் மழை பெய்யலாம், பெய்யாமலும் போகலாம். ஒரு சில இடங்களில் ஒரு மணி நேரம் வரை
கூட கனமழை பெய்யலாம். இப்படியான மழை, காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஏற்படும் மழையை போல பரவலாக இருக்காது.
இன்றைய நிலவரம் என்ன?
இன்று நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணா, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இத்துடன் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் மழை இருக்கும்.
சென்னையில் இன்று மழையா? வெயிலா?
மழைக்கான சாதகமான அறிகுறிகளை காட்டும் MJO இல்லாததால் பருவமழை குறித்து சொல்வதற்கு பாசிட்டிவாக எதுவும் இல்லை. Madden-Julian Oscillation என்பதன் சுருக்கமே MJO. பூமத்திய ரேகை பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி மழை நகரும் வானிலை நிகழ்வைதான் Madden-Julian Oscillation என்று சொல்கிறார்கள். இது 30 முதல் 90 நாட்கள் வரை நீடிக்கும். அடுத்த 3 நாட்களுக்கு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழையின் தாக்கம் இருக்கும். இது வெப்பச்சலனம் காரணமாக ஏற்படும்.
அதன் பின்னர் 3 நாட்களுக்கு மழையில் ஒரு பெரிய பிரேக் இருக்கும். நவம்பர் மாத இறுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் உருவாக வாய்ப்பு உள்ளது. எப்படி பார்த்தாலும், இந்த ஆண்டு நவம்பர் மாதம் மழை எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே!












Click it and Unblock the Notifications