மளிகை, கரண்ட் இல்லை.. சாப்பாடும் இல்லை.. உணவு டெலிவரியும் இல்லை.. மழையில் தவித்து போன சென்னை மக்கள்
சென்னை: பொத்துக்கிட்டு பெய்யும் கனமழையால், சென்னையே தனித்தீவு போல காட்சி தருகிறது.. இதனால் தீவிரமான நிவாரண பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. இதில், சென்னையின் சாலைகள் எல்லாமே வெள்ளக்காடாக காட்சி தருகின்றன.. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.. ரயில், பஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவசர தேவைக்கு மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

நிவாரண முகாம்கள்: சென்னையின் சாலைகளில் பல இடங்களில், பல அடி உயரத்துக்கு தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கின்றன.. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்..
எனினும், இவர்களுக்காக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.. 162 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 521 பேர் இந்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், சாலைகளில் வெள்ளநீர் உள்ளதால், பலரும் நிவாரண முகாம்களுக்கு கூட செல்ல முடியாமல் தவித்து வருகிறார்களாம்.
வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் வெள்ள நீரில் அடித்து செல்கின்றன.. அதேபோல, சில இடங்களில் வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல், சாலைகளில் கார்களில் வந்தவர்கள், ஆங்காங்கே மாட்டி தவித்து கொண்டிருக்கிறார்கள்.. காரையும் விட்டுவிட்டு வர முடியாமல், சாலை நீரிலேயே தவித்து நிற்கிறார்கள். ஆம்புலன்ஸ்களும் இதற்கு விதிவிலக்கல்ல.. மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாமல் மழைநீரில் சாலைகளிலேயே நிற்கின்றன ஆம்புலன்ஸ்கள்.
கடைகள்: சென்னையில், அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அவசர தேவைக்கு கூட அவர்களால் வெளியே வரமுடியவில்லை.. சென்னையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.. வழக்கமாக, இதுபோன்ற மழைக்காலங்களில் அத்தியாவசிய கடைகளான மளிகை கடைகளும் திறந்திருக்கும்.. ஆனால், இன்று பெரும்பாலான மளிகை கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால், சென்னைவாசிகள் திகைத்து போய் உள்ளனர்.
உணவு டெலிவரி சேவையும் முடங்கிவிட்டதால், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யவும் முடியவில்லை.. ஆனால், உணவின்றி தவிப்போருக்கு, மாநகராட்சி கைகொடுத்து உதவியுள்ளது.. உணவு தேவைப்படுவோர், மாநகராட்சியின் எக்ஸ் தளத்தில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேறி உள்ள மக்கள் உணவு தேவைப்பட்டால் சென்னை மாநகராட்சியின் எக்ஸ் தளத்தில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உதவி: 1,39,000 பேருக்கு மாநகராட்சி சார்பில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் உணவு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடம், அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களுக்கு தொடர்ந்து உணவு தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications