சென்னையை சுத்துப் போடும் மழை.. ஹை அலர்ட்டில் மாநகராட்சி! 15 மண்டலங்களுக்கும் தனி அதிகாரிகள் நியமனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்க 15 மண்டலங்களுக்கும் தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கும் என அறிவித்திருக்கப்பட்டிருக்கும் நிலையில் சென்னையில் நாளை மிக கனமழையும், நாளை மறுநாள் அதிக கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

chennai rain weather chennai


இதை அடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் சென்னையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்க 15 மண்டலங்களுக்கும் தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில்,

மண்டலம் 1 - ஜி.எஸ்.சமீரன் ஐஏஎஸ், நிர்வாக இயக்குனர் - வீட்டு வசதி வாரியம்- 6000 38071, 29585823

மண்டலம் 2 - குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ், இயக்குனர், தோட்டக்கலை தோட்டப் பயிர்கள் 91502 38111 28524643

மண்டலம் 3 - மேக்நாத் ரெட்டி ஐஏஎஸ், உறுப்பினர் செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - 78239 25700, 25612011

மண்டலம் 4 - ஆர்.கண்ணன் ஐஏஎஸ், நிர்வாக இயக்குனர், எல்காட் - 78455 99733 42152200

மண்டலம் 5 - ஜானி டாம் வர்கீஸ் ஐஏஎஸ், இயக்குனர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் - 88006 56753, 26425082

மண்டலம் 6 - கணேசன் ஐஏஎஸ், இயக்குனர், நகரம் மற்றும் நாட்டின் திட்டமிடல் - 93423 69099, 29585992

மண்டலம் 7 - ராமன் ஐஏஎஸ், திட்ட இயக்குனர், தமிழ்நாடு சாலைகள் திட்டம் செக்டார் 2 - 94458 83226, 24954360

மண்டலம் 8 - ஷ்ரேயா பி.சிங், மேற்பார்வை இயக்குனர், தமிழ்நாடு பெண்கள் மேம்பாடு கார்ப்பரேஷன் - 94440 94205, 28173403

மண்டலம் 9 - பிரதாப் ஐஏஎஸ், துணை செயலாளர், சிறப்பு திட்டங்கள் - 99522 1887, 25670074

மண்டலம் 10 - விசாகன் ஐஏஎஸ், மேலாண்மை இயக்குனர், டாஸ்மாக் - 96770 66999, 28521201

மண்டலம் 11 - சிவஞானம் ஐஏஎஸ், சிஇஓ, சென்னை பெருவளர்ச்சி கழகம் - 94443 41856, 28415618

மண்டலம் 12 - பிரபாகர் ஐஏஎஸ், நிர்வாக இயக்குனர், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் - 93636 46574, 29862107

மண்டலம் 13 - செந்தில்ராஜ், மேலாண்மை இயக்குனர், சிப்காட் - 73977 70020, 45261771

மண்டலம் 14 - மகேஸ்வரி ரவிக்குமார் ஐஏஎஸ் ,இயக்குனர், கால்நடை பராமரிப்பு - 94450 01100, 24338714
மண்டலம் 15 - உமா மகேஸ்வரி ஐஏஎஸ், கூடுதல் கமிஷனர், வணிக வரி - 94451 95008, 24339830” ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+