சென்னையில் மழை.. இப்பதான் சொன்னாங்க, அதுக்குள்ள அடிச்சு ஊத்துது.. கோபாலபுரம், தேனாம்பேட்டையே நனையுது
சென்னை: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக போவதாக வானிலை மையம் அறிவித்த உடனேயே, சென்னையில் மழை இப்போதே கொட்ட துவங்கி விட்டது.
இன்றைய தினம், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பில், "வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் ஏழு நாள்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மிதமான மழை: இன்றைய தினம் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் வாய்ப்பு இருக்கிறது.. நாளை அதாவது ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்..
தமிழ்நாட்டில் இன்று ஆகஸ்ட் 17ம்தேதி, ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என்று அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பு வெளியாகி அடுத்த சில மணி நேரத்தில் சென்னையை மழைமேகம் சூழ்ந்து கொண்டது.. தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழை பொழிந்தாலும், சென்னையிலும் மழை கொட்டியது.. மாலை முதல் இரவு 7 மணியை கடந்தும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது..
சேலையூர்: குறிப்பாக, புறநகர் பகுதிகளான சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் போன்ற பகுதிகளிலும், பம்மல், குரோம்பேட்டை, அனகாபுத்தூர் பகுதிகளிலும், சென்னையில் தி.நகர், அடையாறு, நுங்கம்பாக்கம், திருவான்மியூர், கோபாலபுரம், தேனாம்பேட்டை, எழும்பூர், கிண்டி, சேப்பாக்கம், மெரினா ஆகிய இடங்களிலும் மழை பொழிந்து வருகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications