சென்னையில் பலத்த காற்றுடன் கொட்டும் கனமழை.. விமான சேவை பாதிப்பு! மக்கள் அவதி!
சென்னை: கடந்த சில நாட்காளகவே சென்னையில் ஓரளவுக்கு லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில், இன்று மாலை தொடங்கி இரவு வரை தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்ததால், 11 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.
கிண்டி, வடபழனி, தி.நகர், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், கோயம்பேடு, அண்ணா நகர், வில்லிவாக்கம், பாடி, அயனாவரம், சென்ட்ரல் என பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக கொழும்பு, ஹாங்காங், ஹைதராபாத், விசாகப்பட்டினம், துபாய் நகரங்களிலிருந்து சென்னை வந்த 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்து வருகின்றன.
முன்னதான இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது.
எனவே, 10-08-2026: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11-08-2026 மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்
12-08-2026 மற்றும் 13-08-2026: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
14-08-2026: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
15-08-2026 மற்றும் 16-08-2026: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
