நினைத்ததை விட ஸ்லோவா இருக்கே! இந்த ஸ்ட்ரெச்தான் பாதிக்க போகுது.. வானிலை வல்லுனர் தந்த எச்சரிக்கை
சென்னை: இன்று சென்னையில் எங்கெல்லாம் மழை பெய்யும்.. எந்த ஸ்ரெட்ச் அதிகமாக பாதிக்கப்படும் என்று சென்னை ரெயின்ஸ் தனியார் வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னை ரெயின்ஸ் என்ற தனியார் வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள கணிப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை அமைப்புகள் நினைத்ததை விட மெதுவாக வலிமை பெற்று வருகிறது. நாளை மாலை வரை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கு கிழக்கு திசையில் இருக்கும் என்றே கணிக்கப்படுகிறது. சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை அடுத்த 2-3 நாட்களுக்கு தீவிரமாக இருக்கும்.

இன்று மகாபலிபுரம் மற்றும் நெல்லூர் இடையிலான பகுதியில்தான் மிக அதிக மழை பெய்யும். சில இடங்களில் மிக மிக அதிக மழை பெய்யும். சென்னையில் மழை 18ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புகள் உள்ளன. இன்றுதான் மழை அதிகம் பெய்யும் என்று கருதப்பட்டது. ஆனால் நாளை மழை தீவிரம் அடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மிக அதிக மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.
சென்னையில் தற்போதைய நிலவரப்படி அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் கனமழை பெய்யும். பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னைக்கு இன்று மஞ்சள் அலர்டும்.. நாளை ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.
அலர்ட்: இன்று மஞ்சள் அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: பெரம்பலூர், சேலம், தருமபுரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் , அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகபட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
இன்று ஆரஞ்ச் அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
16ம் தேதி மஞ்சள் அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: பெரம்பலூர், சேலம், தருமபுரி, , கிருஷ்ணகிரி, வேலூர் , அரியலூர், காரைக்கால் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
16ம் தேதி ஆரஞ்ச் அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications