8 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்! சென்னைக்கு டேஞ்சரா? வானிலை மையம் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது இப்போது மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இதனால் சென்னைக்கு பாதிப்பு இருக்குமா? என்பது குறித்தும் விளக்கியிருக்கிறது.

கடந்த 16ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருந்தது. இது வலுப்பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக அப்போதே வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதனையடுத்து நேற்று இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனையடுத்து வடகிழக்கு நோக்கி நகர தொடங்கியது. இதனால் வடதமிழகத்தில் லேசான மழை இருந்தது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் நகர்ந்து வருவதால், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கு ஆபத்து இருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்தது.

chennai weather rain

இதற்கு விளக்கமளித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், "காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்தது. ஆனால் இதன் வேகம் இப்போது மணிக்கு 6 கி.மீ ஆக குறைந்திருக்கிறது. அடுத்த சில மணி நேரத்திற்கு இதே வேகத்தில்தான் இது நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டிருந்ததைபோல, இது வடகிழக்கு நோக்கி அதாவது ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகர்கிறது.

சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறிவிடும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சென்னைக்கு கனமழை வாய்ப்பு குறைவு என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

முன்னதாக இன்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிச.23 மற்றும் 24ல் தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிச.25ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.26ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச.27ல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வடதமிழக கடலோரப்பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்: இன்று மத்தியமேற்கு வங்கக்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்மேற்கு-மத்தியகிழக்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச.22ம் தேதி ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச.23ம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிச.24ம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். டிச. 25 எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+