சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை! பல்வேறு இடங்களில் 10 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்திருக்கிறது. பல இடங்களில் மழை 10 செ.மீக்கும் அதிகமாக பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

அதிகபட்சமாக மீனம்பாக்கம், சைதாப்பேட்டையில் 12 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. நுங்கம்பாக்கத்தில் 10.7 செ.மீ அளவுக்கும், அடையாறு பகுதியில் 10 செ.மீ, தரமணி 9.5 செ.மீ என மழை பதிவாகியிருக்கிறது. இது தவிர, பாம்பனில் 5.5 செ.மீ, கோவையில் 3.9 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

rain chennai

கனமழை காரணமாக வடபழனியில் அதிக அளவுக்கு மழைநீர் தேங்கியிருக்கிறது. இன்று காலை 7.30 மணி நிலவரப்படி, மழைநீர் இன்னும் வடியவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். தி.நகர், வேளச்சேரி பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் தேங்கியிருக்கிறது. தொடர் விடுமுறை முடிந்து மக்கள் இப்போதுதான் சென்னைக்கு திரும்பியிருக்கிறார்கள். அவர்கள் காலையில் அவசர அவசரமாக வேலைக்கு போக வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால், மழைநீர் அகற்றப்படாததால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்னரும் இதேபோல மழை பெய்தபோதும் மழைநீர் தேங்கியிருந்தது. இப்போதும் தேங்கியிருக்கிறது என்று சென்னை மக்கள் விமர்த்திருக்கிறார்கள்.

இன்று காலை 7.50 மணியளவில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், அடுத்த 24 மணி நேர மழை நிலவரம் குறித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, இன்று காலை சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். மழை மேகங்கள் பொன்னேரி பக்கம் நகர்ந்து விட்டதால், சென்னையில் சூரியன் எட்டிப்பார்க்க வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் நேற்றிரவு போல இன்று இரவும் மழை பெய்யும் என்றும் கூறியிருக்கிறார்.

இதில் நல்ல விஷயம் என்னவெனில், நேற்றிரவு பெய்ததை போல கனமழையாக பெய்யாது.. மிதமான அளவுதான் மழை இருக்கும் என்று கூறியிருக்கிறார். இந்த அறிவிப்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொருந்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+