Chennai Rain: சென்னையில் இன்று இரவு இடி, மின்னலுடன் விட்டு விளாசப் போகுது மழை.. 10 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்
சென்னை: சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இரவு மழை வெளுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. வெயிலும் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்து வருகிறது. இருந்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்றும் திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டியது.

இரவு 10 மணி வரை..
இந்த நிலையில் இரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இது குறித்த மழை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், அரியலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களில் இன்று கனமழை
முன்னதாக வெளியான வானிலை அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகம்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகம்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நெல்லையில் நாளை மழைக்கு வாய்ப்பு
நாளை 21 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகம்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகம்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
6 மாவட்டங்களில் மழை
22 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
23-06-2026 மற்றும் 24-06-2026: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-06-2026 மற்றும் 26-06-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் நாளை கிளைமேட் எப்படி?
சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்." என்று கூறப்பட்டுள்ளது.















Click it and Unblock the Notifications