Chennai Rain: அடுத்த 2 மணி நேரம்.. சென்னையில் பிச்சு உதறப்போகுது மழை.. இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது என்றும், இதனால் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 5 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் கோடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

அடுத்த 2 மணி நேரம் உஷார்
எனினும் நேற்று மழை குறைந்து வெயில் வெளுத்து வாங்கியது. ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"சுமார் 0.9 கிமீ உயரத்தில், சத்தீஸ்கர் முதல் மன்னார் வளைகுடா வரை தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதனால் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணி வரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்றும், இதனால் சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ளது" என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இடி, மின்னலுடன் மழை
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- " இன்று 08-04-2026: தென் தமிழகம், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
09-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10-04-2026 மற்றும் 11-04-2026: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
14 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்
12-04-2026: தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
13-04-2026 மற்றும் 14-04-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
08-04-2026 முதல் 12-04-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று (08-04-2026) மற்றும் நாளை (09-04-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
பதிவான மழை அளவு (செமீ)
* போளூர் (திருவண்ணாமலை) 4,
* செஞ்சி (விழுப்புரம்) 3,
* RSCL-3 செம்மேடு (விழுப்புரம்) 2,
* RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), RSCL-3 வளத்தி (விழுப்புரம்) தலா 1 செமீ மழை பெய்துள்ளது. " என்று கூறப்பட்டுள்ளது.
-
Heavy Rain: சென்னையில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
சென்னையை குளிர்வித்த திடீர் மழை ஏன்? தமிழக எல்லையான தடாவில் நடந்த அந்த சம்பவம்! வெதர்மேன் விளக்கம் -
சென்னையில் மழை! கருமேகம் சூழ்ந்து மரங்கள் அசைந்தாடி! குளிர்ந்த காற்றுடன் இடி சப்தமும் கேட்குது! -
B28 புல்லட் ரயில்.. சென்னை டூ மதுரை 2 மணி நேரம்தான்... இந்தியாவின் புதிய 'அரசன்'.. முழு விவரம் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார்












Click it and Unblock the Notifications