Chennai Rain: அடுத்த 3 மணி நேரம் சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்.. கனமழை பிச்சு உதறும்.. 19 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இரவு 7 மணி வரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, அரியலூர், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர் உள்பட 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
நேற்று (09-01-2026) தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வலுவிழந்து இன்று (10-01-2026) காலை 5.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வடகிழக்கு இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில், முல்லைத்தீவிற்கு (இலங்கை) கிழக்கு - தென்கிழக்கே சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) வடக்கு - வடகிழக்கே 60 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
மிக கனமழை அலர்ட்
இது மேலும், மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னைக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை
இதேபோன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் கூறியிருந்தது.
இந்த நிலையில் இன்று மாலையே சென்னையில் மழை பெய்யப் போவதாக வானிலை மையம் ஆரஞ்சு நிற அலர்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அடுத்த 2 மணி நேரத்தில்
* "தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
* இதேபோன்று மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, திருவாரூர், ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், மதுரை, பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்திருந்தது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications