Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு மேலே பஞ்சு மிட்டாய்.. இரவு ஆரம்பித்தால் கனமழை விடிய விடிய கொட்டும்! வெதர்மேன் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் மழை கொட்டி வருவதால் வெப்பம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதற்கிடையே இன்று பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். குறிப்பாக சென்னை மற்றும் புறகர் பகுதிகளில் இரவு தொடங்கி காலை வரை மழை கொட்டும் என அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் மழை இரவு வரை தொடர்வதால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான ஒரு வானிலை நிலவுகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பே பெய்யும் இந்த மழையால் மக்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

Chennai rain Weatherman Pradeep John warns of heavy rain across tamil nadu for next two days

கொட்டும் மழை

சென்னையிலும் கூட கடந்த சில நாட்களாகவே ஓரளவுக்கு மழை பெய்து வருவதால் வெப்பம் குறைகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றிரவு தொடங்கி நாளை காலை வரை மழை கொட்டும் என அவர் கூறியுள்ளார்.

வெதர்மேன் அலர்ட்

இது தொடர்பாக வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அக்டோபர் மாதம் அபாரமான மழையுடன் தொடங்கியுள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மதுரை, சேலம், நாமக்கல், விருதுநகர் போன்ற உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தென் மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட மழை தற்போது பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்று, தென் உள்மாவட்டங்களான மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, தென்காசி ஆகிய பகுதிகளில் கணிசமான மழைக்கு வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூர், ஈரோடு, நீலகிரி, தருமபுரி, கோவை, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி போன்ற பிற உள் மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்.

சென்னை

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பஞ்சு மிட்டாய் (மழை மேகங்களைச் சொல்கிறார்) அதிகமாக இருக்கிறது. இதனால் KTCC (சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்) சென்னை பெருநகரப் பகுதியிலும், இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை மழை கொட்டும்

இந்த மழை சீசன் அக்டோபர் மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அக்டோபர் 17 முதல் 20 ஆம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

வானிலை மையம்

முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலை பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+