சென்னையை வெளுத்த மழை.. சில நிமிடங்களில் 13 டிகிரி குறைந்த வெப்பம்.. வெதர்மேன் சொன்ன ஆச்சரிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களாகவே சென்னையில் வெப்பம் அதிகமாகவே இருந்தது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திடீரென மழை கொட்டித் தீர்த்து வருகிறது. திடீரெனக் கொட்டிய இந்த மழையால் சென்னையில் சில நிமிடங்களில் சில பல டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைந்ததாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கோடைக் காலம் என்பது ஏப்ரலில் தொடங்கி மே மாதம் தான் உச்சத்திற்குச் செல்லும். ஆனால், இந்தாண்டு எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் வெப்பம் உச்சத்திற்குப் போனது. அப்போது பல நாட்கள் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்குச் சிரமத்தை எதிர்கொண்டனர்.

Chennai rains Temperature drops from 38 degree to 25 degree within minutes of rains

கொட்டும் மழை

அதேநேரம் மே மாதம் கிளைமேட் மொத்தமாக மாறிவிட்டது. மாநிலம் முழுக்க பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரத்திற்கு அறிவியல்பூர்வ தொடர்பு இல்லை என்றாலும் அக்னி நட்சத்திரக் காலத்தில் வெப்பம் அதிகமாகவே இருக்கும் எனச் சொல்வார்கள். ஆனால், இந்தாண்டு அதற்கு நேர்மாறாக அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் மழை கொட்டி வருகிறது.

இதற்கிடையே இன்று பிற்பகல் சென்னையின் ஒரு சில பகுதிகள் மற்றும் புறநகரில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. முற்பகலில் வெயில் கொளுத்தி வந்த நிலையில், பிற்பகலில் கொஞ்ச நேரத்தில் வானிலை மொத்தமாக மாறியது. சென்னையில் பூவிருந்தவல்லி, அம்பத்தூர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென நல்ல காற்றுடன் மழை கொட்டியது. இந்த திடீர் மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாடு வெதர்மேன்

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மழை மேகங்கள் வடக்கு தெற்கு நோக்கி நகர்ந்ததால், ரெட் ஹில்ஸ் (செங்குன்றம்), அம்பத்தூர், போரூர், முகலிவாக்கம், வளசரவாக்கம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, பூந்தமல்லி, திருவேற்காடு என நகரின் மேற்குப் பகுதிகள் மற்றும் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்கிறது. நான் அம்பத்தூரில் இருந்தேன்.. அம்பத்தூரில் மழை பெய்த சில நிமிடங்களிலேயே வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸில் இருந்து 25 டிகிரி செல்சியஸாக குறைந்தது" என்று பதிவிட்டுள்ளார்.

அதீத வெப்பம்

சென்னையில் அம்பத்தூர் மட்டுமின்றி நகரம் முழுக்கவே கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாகவே இருந்தது. சென்னையைப் பொறுத்தவரை இது கடற்கரைக்கு அருகே அமைந்துள்ளதால் ஈரப்பதம் அதிகம் இருக்கும். இதனால் பதிவாகும் வெப்பத்தை விட மக்கள் உணரும் வெப்பம் அதிகமாகவே இருக்கும். இதனால் கடந்த சில நாட்களாக அதீத வெப்பத்தால் மக்கள் பெரும் அசவுகரியத்தை எதிர்கொண்டு இருந்தனர்.

சட்டென குறைந்த வெப்பம்

இந்தச் சூழலில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெய்த இந்த மழையால் வெப்பம் கட்டுக்குள் வந்துள்ளது. சென்னையின் மேற்குப் பகுதியில் சில நிமிடங்களில் காற்றுடன் கொட்டிய மழையால் வெப்பம் சில பல டிகிரி வரை குறைந்துள்ளது. இந்த திடீர் மழையால் சென்னை மக்கள் உற்சாகத்தில் உள்ளனர். சென்னையில் வழக்கமாக மே மாதம் வெப்பம் அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்தாண்டு தொடக்கம் முதலே அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்தே வருகிறது. மே மாதம் முழுக்க இதுபோல சீராக மழை பெய்தால் வெப்பமே இருக்காது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+