ஒரு மாதத்திற்கான மழையில் 60%-ஐ ஒரே மணி நேரத்தில் பெற்ற சென்னை! 28 வருசத்துக்கு பிறகு ரெக்கார்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் நேற்று 1 மணி நேரத்தில் சுமார் 60 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது ஜூலை மாதத்தின் ஒட்டுமொத்த மழை பொழிவில் 60% என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வெயில் மிக கடுமையாக இருந்தது. வழக்கமாக ஏப்ரல் தொடங்கி மே மாதத்தில் வெயில் முடிந்துவிடும். ஆனால் 2023ல் செப்டம்பர் மாதம் வரை வெயில் வாட்டி எடுத்தது. இதற்கு 'எல் நினோதான்' காரணம் என ஆய்வாளர்கள் கூறியிருந்தனர். வெயிலின் தாக்கம் மக்களை மட்டுமல்லாது வன விலங்குகளையும் கடுமையாக பாதித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்பட்டது.

Rain Chennai Weather

அதற்கேற்றார்போல இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெயில் உச்சத்தை தொட்டது. வழக்கமாக வேலூர் தொடங்கி ஈரோடு வரை வெயில் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை கோவை, நீலகிரி என வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. ஊட்டியில் இதுவரை பதிவாகாத அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. எனவே நீர் நிலைகள் முற்றிலும் காய்ந்து போயின. எதிர்பார்த்த அளவுக்கு குளுமை இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழந்தன. அதேபோல உள்ளூர் மக்கள் தண்ணீருக்காக காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை, நீலகிரியில் இந்த நிலைமை எனில், மற்ற மாவட்டங்களில் நிலைமை இதைவிட மோசமாக இருந்தது. ஆனால் இந்த வெயில்தான் வெப்பச்சலனத்தை ஏற்படுத்தி நல்ல மழையை கொண்டு வந்தது.

எங்கெல்லாம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியிருந்ததோ அங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கியது. மே மாதத்தின் இறுதியில் வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்திருந்தது. ஆனால் சென்னையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வந்தது. ஜூன் தொடக்கத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பொளந்து எடுத்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் தணிந்து, பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று சென்னையில் மழை வெளுத்து எடுத்திருக்கிறது. தென்சென்னை, ஈசிஆர், ஓஎம்ஆர், சிறுசேரி, சோழிங்கநல்லூர், கூடுவாஞ்சேரி ஆகிய இடங்களில் மழை அதிக அளவில் பெய்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில்,

"மேற்குறிப்பிட்ட இடங்களில் மிக அதிக அளவில் மழை பெய்திருந்தது. சென்னையில் ஜூலை மாதம் மொத்தமாக 100 மி.மீதான் மழை பெய்யும். ஆனால், நேற்று வெறும் 1 மணி நேரத்தில் 60 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. இது ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 60% ஆகும். கடந்த 1996க்கு பிறகு சென்னை அதிக அளவு மழைப்பொழிவை பெற்றிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

மழை காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியிருந்தது. சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+