சென்னையில் இன்று காலை ஒரு மணி நேரத்திலேயே செம காட்டு காட்டிய கனமழை.. 2 ஏரியாவில் பயங்கர மழை!
சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டிய நிலையில், இன்று காலை மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 6 செ.மீட்டருக்கும் மேல் மழை பதிவாகியுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெறும். இதைத் தொடர்ந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என கணிக்கப்படுகிறது.

இன்றும் மழை கொட்டும்: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகக்கூடிய நிலையில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 16, 17 ஆம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
அதிகனமழை பெய்யும் மாவட்டங்கள்: இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், இராணிப்பேட்டை சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெதர்மேன் எச்சரிக்கை: தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் முழுவதும் கனமழை பதிவாகியுள்ளது. அடுத்த மழைக்கான மேகக்கூட்டங்கள் தயாராகி வருகின்றன, இப்போது அவை நகரும். இன்று அதிக மழைக்கான மேகக் கூட்டங்கள் வந்து இறங்கும். நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை கடற்கரை அருகே வட தமிழகத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னையில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், சென்னையில் ஒரு மணி நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டியது.
சென்னையில் கொட்டிய கனமழை: வடபழனி, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவானது. வேளச்சேரி, ராயப்பேட்டை, சோழிங்கநல்லூர், பாலவாக்கம், அண்ணா நகர், ராயபுரம், பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், மணலி பகுதிகளிலும் 5 செ.மீட்டருக்கும் அதிகமாக மழைப்பொழிவு பதிவானது.
சென்னையில் இன்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதன்படி, கோடம்பாக்கம், வடபழனி, வள்ளுவர் கோட்டம், எழும்பூர், அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மழை பெய்த நிலையில், அதிகாலை மழை ஓய்ந்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு: இந்நிலையில், சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மழைப்பொழிவு விவரங்களை சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9.2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 6 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக பெருங்குடியில் 4.9 செ.மீ மழை பெய்துள்ளது.

இன்று காலை 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரத்தில், அயப்பாக்கத்தில் 3.3 செ.மீ மழை பெய்துள்ளது. முகலிவாக்கத்தில் 3 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் இன்று காலை சராசரியாக 1.2 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மக்களுக்கான உதவி எண்: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மாநகராட்சியின் 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிலும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044 2561 9204, 044 25619206 மற்றும் 044 2561 9207 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், மாநகராட்சியின் chennaicorporation.gov.in என்ற இணையதளம், நம்ம சென்னை செயலி, Greater Chennai Corporation Facebook. @chennaicorp என்ற Instagram-லும்,@chennaicorp என்ற Thread-லும், @chennaicorp என்ற X App ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications