மழை எல்லாம் ஓவர்.. சென்னையில் இன்று வெப்பம் உச்சத்திற்குப் போகும்! வெதர்மேன் கொடுத்த மேஜர் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கோடைக் காலத்திலும் கூட கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாகச் சென்னையிலும் கூட நேற்று முன்தினம் மழை பெய்தது. இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்றைய தினம் வானிலை எப்படி இருக்கும்.. சென்னையில் கிளைமேட் எப்படி இருக்கும் என்பது குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் எப்போதும் கோடைக் காலத்தில், மே மாதம் வெப்பம் உச்சம் தொடும். ஆனால், இந்தாண்டு நேர்மாறாகவே இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதமே பல்வேறு இடங்களிலும் வெப்பம் உச்சம் தொட்டது. ஆனால், மே மாதம் தொடங்கிய பிறகு வெப்பம் குறைந்தது. மாநிலத்தில் பல இடங்களில் வெப்பம் பரவலாகப் பெய்தது.

மழை ஓவர்
குறிப்பாக யாருமே எதிர்பார்க்காத வகையில் சென்னையில் மழை பெய்தது. கடந்த மே 11ம் தேதி திடீரென சென்னையில் கொட்டிய மழையால் வெப்பம் கணிசமாகக் குறைந்தது. சென்னையில் மே மாதம் மழை பெய்வது ரொம்பவே அரிதானது. இந்த திடீர் மழையைச் சென்னைவாசிகள் கொண்டாடினர். இருப்பினும், அந்த மழை முடிவுக்கு வந்துவிட்டதைப் போலவே தெரிகிறது. சென்னையில் இன்று வெப்பம் அதிகரிக்கவே வாய்ப்பு இருப்பதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வெதர்மேன்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலும், "தமிழ்நாட்டிற்கு ஒரு பிரகாசமான நாள் காத்திருக்கிக்கிறது.. இன்று சென்னை (மீனம்பாக்கம்) ஆண்டின் முதல் 40 டிகிரி செல்சியஸ் (104 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையைப் பதிவு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.
நேற்றைய தினம் தமிழ்நாட்டில் பல இடங்களில் வெப்பம் 39 டிகிரி செல்சியஸை தாண்டின.. நேற்று முன்தினம் நாள் மழை பெய்ததால் வேலூரில் நேற்று வெப்பம் குறைவாக இருந்தது. இருப்பினும், இன்று வேலூரில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கவுள்ளது.. ஆனால் நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பம் மதுரையில் பதிவாகி இருந்தது.
வெப்பம் எங்கே அதிகம்
நேற்று மே 12ம் தேதி தமிழ்நாட்டில் 39 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ள இடங்களைப் பார்க்கலாம். மதுரை விமான நிலையத்தில் 41.0 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கரூரில் 40.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 40.4 டிகிரி செல்சியஸ், மதுரை நகரம் 40.4 டிகிரி செல்சியஸ், திருச்சி விமான நிலையம் 39.9 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டை 39.6 டிகிரி செல்சியஸ், சென்னை ஏர்போர்ட் 39.4 டிகிரி செல்சியஸ், கடலூர் 39.0 டிகிரி செல்சியஸ், சென்னை நகரம் 39.0 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
இன்று எங்கு மழை
இன்று மழையைப் பொறுத்தவரை மேற்கு தமிழக மாவட்டங்களான நீலகிரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், விருதுநகர், தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. பெங்களூரிலும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை கிளைமேட்!
சென்னையைப் பொறுத்தவரை வெப்பம் 39/40 டிகிரி செல்சியஸாக இருக்கும். நேற்று சென்னை மீனம்பாக்கத்தில் 39.4 C வெப்பம் பதிவாகி இருந்தது. சென்னை நகரத்தில் 39.0 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. சென்னையில் இன்றைய தினம் வெப்பம் 40 C செல்சியஸை தாண்ட வாய்ப்பு மிக மிக அதிகம்" என்று பதிவிட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Badam Pisin Jelly: கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான 'பாதாம் பிசின் பழக் கலவை ஜெல்லி! தயாரிப்பது எப்படி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications