சென்னை மக்களே ரெடியா? நெருங்கும் மழை மேகங்கள்.. இன்று இரவு கனமழை வெளுக்கும்.. வெதர்மேன் சொன்ன அலர்ட்
சென்னை: சென்னையில் இப்போது மழை மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், இன்றிரவு வரை சென்னையில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த மழை நீண்ட நேரம் இருக்காது என்றும் குறுகிய நேரத்தில் கனமழை கொட்டுவது போலவே இருக்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தப் பருவமழை சீசனில் ஓரளவுக்கு நல்ல மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். குறிப்பாகக் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

அதிலும் மாலை தொடங்கி இரவு வரை மழை பெய்வதால் வெப்பம் குளிர்ந்து குளிர்ச்சியான ஒரு வானிலை நிலவுகிறது. சென்னையிலும் கூட கடந்த இரு நாட்களாகவே நல்ல மழை பெய்திருக்கிறது. இதற்கிடையே சென்னையை இன்றும் மழை மேகங்கள் நெருங்குவதாகத் தெரிவித்துள்ள வெதர்மேன் பிரதீப் ஜான் அடுத்த சில மணி நேரம் நல்ல மழை சென்னைக்கு இருக்கும் எனக் கூறியிருக்கிறார்
இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், "ரெடியா சென்னை? இடியுடன் கூடிய மழை மேகங்களின் நுழைவாயிலாகக் கருதப்படும் ஆவடியை நெருங்கியுள்ளது. சென்னையின் பிற பகுதிகளுக்கும் மழை வரவுள்ளதற்கான பொதுவான அறிகுறிதான் இது!
அடுத்தபடியாக அம்பத்தூர் பகுதியிலும், அதைத் தொடர்ந்து சென்னையின் பிற இடங்களிலும் தீவிரமான, ஆனால் குறுகிய நேரம் மட்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு நாட்களைப் போல இது ஒரு பெரிய மழை அமைப்பு அல்ல. இதனால் சென்னையின் சில பகுதிகளில் மழை பெய்யாமல் கூட போகலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications