Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”மழையும் விடாது.. பனியும் விடாது” அடுத்த ஒரு வாரம் தமிழகத்தில் கிளைமேட் இப்படித்தான்.. வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வரும் 4 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று அடுத்த இரு நாட்களுக்கு பனியின் தாக்கமும் இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்தது.

Chennai Weather Rain and Fog to Persist Across Tamil Nadu for a Week Says Weather Department

தூத்துக்குடியில் 8 செமீ மழை

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் கனமழை வெளுத்து வாங்கியது. கயத்தாரில் நேற்று ஒரே நாளில் 8 செமீ மழை பெய்தது. கடம்பூரில் 7 செமீ மழை பெய்தது. நெல்லை, குமரி, திருப்பூர், தேனி, தூத்துக்குடி, தென்காசி என பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. ஒரு சில இடங்களில் அறுவடைக்காக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

இந்த நிலையில் வரும் மார்ச் 4 ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும், அடுத்த இரு நாட்களுக்கு பனிமூட்டமும் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று இடி, மின்னலுடன் மழை வெளுக்கும்

இதன் காரணமாக இன்று (26-02-2026) தென் தமிழகம், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

27-02-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தென் தமிழகத்தில் மழை பெய்யும்

28-02-2026 மற்றும் 01-03-2026: மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

02-03-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

4 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்

03-03-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகள்) ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

04-03-2026: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு:

27-02-2026: வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். 28-02-2026: தமிழக கடலோர பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னையில் கிளைமேட் எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (26-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (27-02-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

26-02-2026: தெற்கு அந்தமான் கடலின் சில பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 27-02-2026 முதல் 02-03-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

பதிவான மழை அளவு

* கயத்தார் (தூத்துக்குடி) 9 செமீ,
* பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), கடம்பூர் (தூத்துக்குடி) தலா 7 செமீ.
* புத்தன் அணை (கன்னியாகுமரி), சிற்றாறு-1 (கன்னியாகுமரி) தலா 6 செமீ,

* காங்கேயம் (திருப்பூர்), காக்காச்சி (திருநெல்வேலி), ஊத்துக்குளி (திருப்பூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), திண்டுக்கல் ARG (திண்டுக்கல். சென்னிமலை (ஈரோடு), மூலனூர் (திருப்பூர்). வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 5 செமீ,

* திண்டுக்கல் (திண்டுக்கல்), ஊத்து (திருநெல்வேலி), உப்பாறு அணை (திருப்பூர்). பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), எட்டயபுரம் (தூத்துக்குடி), அவினாசி (திருப்பூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), சிவலோகம் (சிற்றாறு-II) (கன்னியாகுமரி) தலா 4 செமீ.

* அமராவதி அணை (திருப்பூர்), தாராபுரம் (திருப்பூர்), வெள்ளக்கோயில் (திருப்பூர்), திற்பரப்பு (கன்னியாகுமரி), நாங்குனேரி (திருநெல்வேலி), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), நல்லதங்கால் நீர்த்தேக்கம் (திருப்பூர்), தேக்கடி (தேனி), அரவக்குறிச்சி (கரூர் தலா 3 செமீ மழை பெய்துள்ளது).

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+