Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ஊட்டி கிளைமேட்.. பகலிலும் ஸ்வெட்டர் போடும் மக்கள்.. தமிழ்நாடு வெதர்மேன் ஆச்சரிய தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே குளிர்ச்சியான ஒரு வானிலையே நிலவி வருகிறது. இந்தக் குளிர் இன்னும் எவ்வளவு நாட்களுக்குத் தொடரும்.. பொங்கல் காலகட்டத்தில் வெப்பம் எந்த மாதிரி இருக்கும் என்பது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார். மேலும், இன்றைய தினம் மாநிலத்தில் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது தொடர்பாகவும் அவர் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த பருவமழை சீசனில் மழை ஓரளவுக்குச் சிறப்பாகவே இருந்தது. மாநிலம் முழுக்க நல்ல மழை இருந்ததால் முக்கியமான நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின. இதனால் அடுத்த சம்மரில் தண்ணீருக்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் வெப்பம் குறைந்து குளிர் அதிகரித்தது.

Chennai s Rare Chill Day-Night Temp Sparks Sweater Weather Tamil Nadu Weatherman alert for Pongal

குறையும் வெப்பம்

சென்னை தொடங்கி மாநிலம் முழுக்க வெப்பம் குறைந்தது. இதனால் இரவு நேரங்களில் குளிர்ச்சியான ஒரு வானிலையே நிலவி வந்தது. சென்னைவாசிகளுக்கு இது ஒரு இதயமான சூழலை உருவாக்குவதாக இருந்தது. இதற்கிடையே வெப்பம் இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இதேபோல இருக்கும்.. பொங்கல் சமயத்தில் என்னவாக இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கமளித்துள்ளார்.

வெதர்மேன்

இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன், "இப்போது இரவுக்கும் பகலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இது சென்னை மட்டுமல்லாது, மாநிலத்தின் பிற நகரங்கள் மற்றும் மலைப் பகுதிகளுக்கும் ஒரு சிறப்பான நாளாக அமைந்தது. அங்கும் இதே குளிர்ந்த சூழலே நீடித்தது.

இன்று பகல் முழுவதும் குளிர் நீடிக்கும். ஆனால், நாளையில் இருந்து பகல் வெப்பநிலை சுமார் 28°Cஐ நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஞாயிறு பகலில் 24°C வெப்பம் இருந்தது. இன்று அதிகாலை குறைந்தபட்சமாக 21.7°C ஆகப் பதிவானது. 1 முதல் 2°C வேறுபாடு என்பது மிகவும் அரிதான ஒன்று. சென்னையில் பகலில் யாரும் ஸ்வெட்டர் அணிவதைப் பார்த்ததில்லை.

எவ்வளவு வெப்பம்

பதிவான வெப்பநிலை விவரங்கள்: சென்னை (பகல் 24.0°C, இரவு 21.7°C), கோவை (பகல் 24.9°C, இரவு 20.4°C), சேலம் (பகல் 25.8°C, இரவு 20.4°C), திருச்சி (பகல் 25.9°C, இரவு 20.6°C), நாகப்பட்டினம் (பகல் 25.6°C, இரவு 21.5°C), தஞ்சாவூர் (பகல் 25.0°C, இரவு 20.0°C), குன்னூர் (பகல் 16.0°C, இரவு 14.0°C). நேற்று வேலூரில் பகல் 21.2°C, இரவு 20.1°C என என்று ஒரு அருமையான இரவாகவே இருந்தது.

மேகமூட்டம் விலகியதும், பொங்கல் விடுமுறை நாட்களில், குறிப்பாக அடுத்த வார இறுதியில் சென்னையின் இரவு வெப்பநிலை 18°C ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டிசம்பர் மாதத்தைப் போலக் குளுகுளு இரவுகள் மற்றும் அதிகாலை மீண்டும் வரும். மலைப் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பு இல்லை என்பதால் இனிமையான சூழல் நிலவும்.

மழை எங்கே

மழை நிலவரத்தைப் பொறுத்தவரை, டெல்டா மற்றும் கடலூர் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. அத்துடன் பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற அண்டைய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். சென்னையில் மிதமான தூறல் மழை தொடரும்" என்று அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் அடுத்த 10 நாட்களுக்குக் குளிர் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவலையும் பகிர்ந்துள்ளார். அதில் ஜனவரி 17 முதல் 21 வரையிலான நாட்களில் குளிர் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+