மேலே சுத்துதே “சங்கு சக்கரம்”.. 11 மாவட்டங்களில் வாய்ப்பு! சென்னையில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம்
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
22 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): குன்றத்தூர் (காஞ்சிபுரம்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), தரமணி ARG (சென்னை) தலா 8, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சிதம்பரம் AWS (கடலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), சிதம்பரம் (கடலூர்), மின்னல் (இராணிப்பேட்டை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை) தலா 7, சோழிங்கநல்லூர் (சென்னை), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), திருத்தணி (திருவள்ளூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), எம்ஜிஆர் நகர் (சென்னை), தொண்டையார்பேட்டை (சென்னை), புவனகிரி (கடலூர்), பணப்பாக்கம் (இராணிப்பேட்டை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் ஆலந்தூர் (சென்னை) தலா 6, செங்கல்பட்டு, சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), திருவள்ளூர், சென்னை கலெக்டர் அலுவலகம், ஆவடி (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்)), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), ஆரணி (திருவண்ணாமலை), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), நந்தனம் ARG (சென்னை), ACS கல்லூரி (காஞ்சிபுரம்) தலா 5, கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), அரக்கோணம் (இராணிப்பேட்டை), காஞ்சிபுரம், சென்னை விமானநிலையம், உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), எண்ணூர் AWS (திருவள்ளூர்), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), ஆர்எஸ்எல்-3 செம்மேடு (விழுப்புரம்), திருப்போரூர் (செங்கல்பட்டு), அம்முண்டி (வேலூர்), கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) தலா 4, திரூர் KVK AWS (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), ராணிப்பேட்டை, ஆற்காடு (ராணிப்பேட்டை), சோழவரம் (திருவள்ளூர்), குடியாத்தம் (வேலூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), சேட்பேட்டை (திருவண்ணாமலை), மேலாளத்தூர் (வேலூர்), பாலர் அணைக்கட்டு (ராணிப்பேட்டை), பூண்டி (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), வாலாஜா (இராணிப்பேட்டை), திருத்தணி PTO (திருவள்ளூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), மங்களபுரம் (நாமக்கல்), சோளிங்கர் (இராணிப்பேட்டை), செய்யூர் (செங்கல்பட்டு), வேலூர், Rscl-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), செஞ்சி (விழுப்புரம்), காட்பாடி (வேலூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்) தலா 3, நெடுங்கல் (கிருஷ்ணகிரி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), மாதவரம் AWS (திருவள்ளூர்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), ஆர்எஸ்எல்-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), போளூர் (திருவண்ணாமலை), KVK காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), ஆர்எஸ்எல் வல்லம் (விழுப்புரம்), ஆம்பூர் (திருப்பத்தூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்),), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), திண்டுக்கல், செய்யார் (திருவண்ணாமலை), நம்பியூர் (ஈரோடு), கிருஷ்ணகிரி, Rscl-2 சூரப்பட்டு (விழுப்புரம்),சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பொன்னேரி (திருவள்ளூர்), பவானிசாகர் (ஈரோடு), ஆர்எஸ்எல்-2 நெமூர் (விழுப்புரம்) தலா 2, சத்தியமங்கலம் (ஈரோடு), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), மணம்பூண்டி (விழுப்புரம்), சூளகிரி (கிருஷ்ணகிரி), ஆர்எஸ்எல்-2 கேதார் (விழுப்புரம்), பொன்னை அணை (வேலூர்), திருவண்ணாமலை, ஆர்எஸ்எல்-3 வளத்தி (விழுப்புரம்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), ஊத்து (திருநெல்வேலி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), ஆலங்காயம் (திருப்பத்தூர்), திண்டிவனம் (விழுப்புரம்), கேசிஎஸ் மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), திருப்பத்தூர் PTO, விழுப்புரம், பொதுப்பணித்துறை (திருப்பூர்), மேல் பவானி (நீலகிரி), காரைக்கால் தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வடதமிழக - தென்ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22 மற்றும் 23 ஆகிய நாட்களில் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24.06.2023: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 24 ஆம் தேதி வரை இலட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications