ஊட்டி, கொடைக்கானலில் நடந்த திடீர் மாற்றம்.. அதிர்ந்துப்போன ஆய்வாளர்கள்! வெளியான ஷாக் தகவல்
நீலகிரி: உலகம் வெப்பமடைந்து வருகிறது என்று தொடர்ந்து சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் அதிக அளவில் வெயில் பதிவாகி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே பதிவாகி இருக்கிறது. ஊட்டியை பொருத்தவரையில் கடந்த 12ம் தேதி மிக அதிகபட்சமாக 22.8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகி இருக்கிறது.

இந்த காலங்களில் இயல்பான வெப்பநிலை சராசரியாக 20.5° செல்சியஸ் முதல் 21.1 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும். ஆனால் அதை விட வெயில் அதிகமாகவே பதிவாகியிருக்கிறது.
கொடைக்கானலை பொறுத்தவரை கடந்த 9ம் தேதி மட்டும் அதிகபட்ச வெப்பநிலை 17.2 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அன்றைய தினத்தில் 17.6 டிகிரி செல்சியஸ் என்பது இயல்பான வெப்பநிலை ஆகும். அந்த ஒரு நாளைக்கு தவிர, மற்ற நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. கடந்த 11ம் தேதி மிக அதிகபட்சமாக 19.9 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கொடைக்கானலில் வெயில் பதிவாகி இருந்தது.
இந்த காலங்களில் சராசரியாக 17.4 டிகிரி செல்சியஸ் முதல் 17.6 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாக வேண்டும். ஆனால், இயல்பை விட கூடுதலாகவே வெயில் பதிவாகி இருப்பது வானிலை ஆய்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று கொடைக்கானல் பகுதியில் 18.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகி இருக்கிறது. ஆனால், இன்றைய இயல்பான வெப்பநிலை என்பது 17.4 டிகிரி தான். அந்த வகையில் இயல்பை விட 1 டிகிரி அளவிற்கு வெயில் கூடுதலாக பதிவாகி இருக்கிறது. ஊட்டியை பொறுத்தவரை, இன்று 19.8 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 22 டிகிரி அளவுக்கு ரயில் பதிவாகி இருக்கிறது. இது இயல்பை விட 2.2 டிகிரி செல்சியஸ் கூடுதலாகும்.
கடலூர், தர்மபுரி, காரைக்கால், மதுரை நகரம், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, பாம்பன், புதுச்சேரி மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய பகுதியில் மட்டும் வெயில் இயல்பை விட குறைவான அளவுக்கு பதிவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications