ஆளுநரின் 'பேரிடர்' ஆலோசனை: 'ஆர்வமா' கேள்வியை கேட்டு வாங்கி டெல்லியை தெறிக்கவிட்ட முதல்வர் ஸ்டாலின்!
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேரிடர் குறித்து ஆலோசனை நடத்துவதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியான பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து தென் மாவட்டங்கள் பெருமழை, வெள்ளத்தில் சிக்கி உள்ளன. தமிழ்நாடு அரசு முழு வீச்சில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. முப்படைகளும் களத்தில் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை ஒரு அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தது. அதில், ஆளுநர் ரவி அவர்கள், தமிழ்நாட்டின் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் தற்போதைய நிலவரத்தை மறுஆய்வு செய்யவும், மீட்பு மற்றும் நிவாரணத்துக்கான அதிகபட்ச வளங்களைத் திரட்டும் சாத்தியம் குறித்தும் விவாதிக்க மத்திய அமைப்புகள் மற்றும் ஆயுதப் படைகளின் உயர் அதிகாரிகளுடனான கூட்டத்தை சென்னை ராஜ் பவனில் நாளை கூட்டியுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு மீட்பு பணிகளில் இறங்கியிருக்கும் நிலையில் ஆளுநர் ரவி தனியே ஆலோசனைக் கூட்டம் நடத்துவது பல கேள்விகளை எழுப்பியது. ஆனால் பாஜகவின் எச்.ராஜா உள்ளிட்டோர், "வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட தென்மாவட்ட மக்களை பார்பதை விட இந்து விரோத புள்ளி வைத்த கூட்டணி கூட்டம் தான் முதல்வருக்கு முக்கியமாகி விட்டதா? ஆனால் வெள்ள நிவாரணம் குறித்து அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தும் ஆளுநர். யார் தமிழக மக்களின் நலன் விரும்பி என்பது தெளிவு." என தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் பாதிப்பு, தென் மாவட்ட வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின் விவரித்தார். இந்த சந்திப்பு முடிவடைந்த நிலையில் செய்தியாளர்கள், கவர்னர், ஆளுநர் என குரல் எழுப்பினர். இதனையடுத்து திரும்பி வந்த முதல்வர் ஸ்டாலின், 'ஆளுநர்' குறித்து என்ன கேள்வி என கேட்டார். இதற்கு, ஆளுநர் ஆலோசனை நடத்துகிறாரே அது பற்றிய உங்கள் ரியாக்ஷன் என்ன என செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின், கொரோனா போன்ற பேரிடர் ஏற்பட்ட காலங்களில் பிரதமர் தான் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். அப்ப குடியரசுத் தலைவர் ஏதாவது செஞ்சிருந்தா என்ன ரியாக்ஷன்? அதே ரியாக்ஷன்தான் இப்ப என சொல்லிவிட்டு நகர்ந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications