சிவப்பு நிற ஜீப்பில்.. திடீரென நிலைத்தடுமாறி விழப்போன முதல்வர் ஸ்டாலின்! தாங்கி பிடித்த காவலர்கள்
சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையை முதல்வர் ஸ்டாலின் சிவப்பு நிற ஜீப்பில் சென்று ஆய்வு செய்தார். இந்த வேளையில் அவர் சிவப்பு நிற ஜீப்பில் ஏற முயன்றபோது நிலைத்தடுமாறி கீழே விழப்போனது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தன. இந்த புயலால் தொடர்ந்து கனமழை பெய்தது.

இதனால் இந்த 4 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
இந்த புயல் கடந்த 4ம் தேதி ஆந்திராவில் கரையை கடந்துள்ளது. இதனால் தற்போது சென்னையில் மழை என்பது பெரிய அளவில் இல்லை. இருப்பினும் மிக்ஜாம் புயல் காரணமாக வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை தண்ணீரில் மூழ்கியது. தற்போது மழை இல்லாததால் வெள்ளம் என்பது பெரும்பாலான இடங்களில் வடிந்துள்ளது. இன்னும் சில இடங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது.
அந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு, மாநகராட்சி அதிகாரிகள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அரசு, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் மூலம் அவர்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் வெள்ள பாதிப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சிவப்பு நி ஜீப்பில் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பல இடங்களில் ஆய்வு செய்தார். அவருடன் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகள் இருந்தனர். மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் நிவாரண முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து உணவு, பெட்ஷீட் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் சிவப்பு நிற ஜீப்பில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழப்போன சம்பவம் குறித்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. அதாவது சென்னையில் ஆய்வை முடித்த பிறகு முதல்வர் ஸ்டாலின் சிவப்பு நிற ஜீப்பில் முன்பகுதியில் டிரைவர் இருக்கை அருகே இருக்கும் இருக்கையில் ஏறி அமர சென்றார். அவரை தொடர்ந்து பாதுாவலர்கள் சென்றனர். ஜீப்பை பாதுகாவலர் ஒருவர் திறந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் ஜீப்பில் ஏற முயன்றார். அப்போது திடீரென்று அவர் நிலைத்தடுமாறி கீழே விழ முயன்றார். ஆனால் சுதாரித்து கொண்ட பாதுகாவலர்கள் முதல்வர் ஸ்டாலினை தாங்கி பிடித்தனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications