மேகமே உடையுற மாதிரி.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! 14 மாவட்டங்களில் கனமழை கொட்டப்போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் வடதமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

CMD has informed that 3 districts of Tamil Nadu will receive very heavy rain

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

08.01.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் கனமழை பெய்யக்கூடும்.

09.01.2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும்.

10.01.2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும். 11.01.2024 முதல் 13.01.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான - கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான - கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சிவகாசி (விருதுநகர்) 11, சீர்காழி (மயிலாடுதுறை), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 7, பிளவக்கல் பெரியாறு அணை (விருதுநகர்) 6, காரைக்கால் (காரைக்கால்), அண்ணாமலை நகர் (கடலூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), காக்காச்சி (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), பாபநாசம் (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 5, செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), சிதம்பரம் (கடலூர்), ராஜபாளையம் (விருதுநகர்), நன்னிலம் (திருவாரூர்), சேர்வலாறு அணை (திருநெல்வேலி) தலா 4, ஆண்டிபட்டி (தேனி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), எழுமலை (மதுரை), பெரியகுளம் (தேனி), பரங்கிப்பேட்டை (கடலூர்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), மரக்காணம் (விழுப்புரம்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கின்னக்கோரை (நீலகிரி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கே.எம்.கோயில் (கடலூர்), வத்திராயிருப்பு (விருதுநகர்), வலங்கைமான் (திருவாரூர்), உசிலம்பட்டி (மதுரை) தலா 3, வைகை அணை (தேனி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கடனா அணை (தென்காசி), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), நீடாமங்கலம் (திருவாரூர்), ஆண்டிபட்டி (மதுரை), கருப்பாநதி அணை (தென்காசி), அரண்மனைப்புதூர் (தேனி), திருப்போரூர் (செங்கல்பட்டு), குந்தா பாலம் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), வீரபாண்டி (தேனி), புதுச்சேரி (புதுச்சேரி), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), கெத்தை (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), களக்காடு (திருநெல்வேலி), வாடிப்பட்டி (மதுரை), முத்துப்பேட்டை (திருவாரூர்), கொடவாசல் (திருவாரூர்) தலா 2, கும்பகோணம் (தஞ்சாவூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), சோத்துப்பாறை (தேனி), திருவாரூர் (திருவாரூர்), மேல் பவானி (நீலகிரி), மஞ்சளாறு (தஞ்சாவூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), லால்பேட்டை (கடலூர்), வனமாதேவி (கடலூர்), SRC குடிதாங்கி (கடலூர்), மன்னார்குடி (திருவாரூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), சண்முகாநதி (தேனி), பேரையூர் (மதுரை), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), போடிநாயக்கனூர் (தேனி), புவனகிரி (கடலூர்), பாண்டவரடி (திருவாரூர்), ஆழியார் (கோயம்புத்தூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), வானூர் (விழுப்புரம்), மணல்மேடு (மயிலாடுதுறை), கடலூர் (கடலூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), குப்பணம்பட்டி (மதுரை), அவலாஞ்சி (நீலகிரி), ஒரத்தநாடு (தஞ்சாவூர்) தலா 1." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+