கெட் ரெடி.. படபடன்னு அடுத்த 3 மணி நேரம் மழை கொட்டப்போகுது! 9 மாவட்டங்களுக்கு பறந்த வானிலை அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் வானிலை மையம் அறிவிப்பில், "9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று பரவலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முன்னதாக வெளியான அறிவிப்பில், "தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 23.02.2024: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப்பகுதிகள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
24.02.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
25.02.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
26.02.2024 முதல் 28.02.2024 வரை: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
29.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஆயிக்குடி (தென்காசி) 2, கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி ) 1. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications