தமிழகத்தில் இன்று வெயில் அதிகம்! சென்னையில் எப்படி? உங்கள் மாவட்டத்தின் நிலை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

weather tamil nadu

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாகவும், மற்ற பகுதிகளில் இயல்பையொட்டியும் இருக்கக்கூடும்.

இந்த நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 23) அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், வேலூர் - 102.92 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகர் - 101.84, பாளையங்கோட்டை, திருத்தணி - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸையொட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரை கீழ்கோத்தகிரி எஸ்டேட், தேவாலா (நீலகிரி), இலுப்பூர் (புதுக்கோட்டை) - 20 மி.மீ. மழை பதிவானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+