சென்னைக்கு மழை இருக்கா? டெல்டாவுக்கு போகும் கார்மேகங்கள்.. வானிலை நிலவரம் சொல்வது இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இன்றும் நாளையும் சென்னையில் மழை பெய்யுமா? என தனியார் வானிலை ஆர்வலர் விளக்கமளித்திருக்கிறார்.

தனியார் வானிலை ஆர்வலர் COMK தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "தமிழ்நாட்டின் சமவெளிப் பகுதிகளில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. டெல்டா பகுதிகளில் சில இடங்களில் நல்ல மழை காணப்படுகிறது. சேலத்திற்கு அருகிலும் சில இடியுடன் கூடிய மழை மேகங்கள் தென்படுகின்றன.

Chennai rain

முன்னதாக, ஆந்திரா/தமிழ்நாடு எல்லையில் இருந்து வந்த மழை மேகங்கள் சென்னைக்கு அருகில் வரும்போது வலுவிழந்தன. ஆந்திரா/தமிழ்நாடு எல்லையில் காணப்படும் அடுத்தகட்ட மேகங்கள் கடற்கரையை சென்றடைகிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்" என கூறியிருக்கிறார். எனவே இப்போதைக்கு சென்னையில் மழை இல்லை. நாளைக்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முன்னதான சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தொடங்கி செப்.1 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்.2-5 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3" செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (30-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (31-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+