Akvan for Andhra: அர்னாப், முரசு புயலை தொடர்ந்து, ஆந்திராவுக்கு செல்லும் அக்வான் புயல்! வானிலை மையம்
சென்னை: வங்கக் கடலில் நாளை உருவாகவுள்ள அக்வான் புயல் தமிழகத்தை நோக்கி வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது ஆந்திர கடலோரத்தை நோக்கி செல்லும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது: கடந்த வெள்ளிக்கிழமை அன்று தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியுள்ளது.

இந்த நிலையில் இந்த காற்றழுத்தம் நாளை புயலாக மாறுகிறது. இதற்கு ஈரான் பரிந்துரைத்த அக்வான் என்ற பெயர் சூட்டப்படுகிறது. இந்த புயல் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது. இதனால் இது ஆந்திரா கடலோர பகுதிகளுக்கு நவம்பர் 19ஆம் தேதி வாக்கில் சென்றடையும்.
அர்னாப், முரசு புயல்களை தொடர்ந்து அக்வான் புயலும் ஆந்திரா செல்கிறது. கடந்த 30 நாட்களில் ஆந்திரா செல்லும் 3ஆவது புயல் இதுவாகும். இது எப்போது எங்கே கரையை கடக்கும் என்பது குறித்து இனி வரும் நாட்களில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications
