ஒடிஸா அருகே கரையை கடக்க தொடங்கிய அக்வான் புயல்! கண் பகுதி கடக்கும் போதுதான் சம்பவமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒடிஸாவின் கோபால்பூர் இடையே அக்வான் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வு 2 மணி நேரம் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு- மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தீவிர சூறாவளி புயலான அக்வான், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 21 கி.மீ. வேகத்தில் வடக்கு, வடமேர்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்து சூறாவளி புயலாக மாறியுள்ளது.

weather rain cyclone akvan

ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 110 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும் ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே 170 கி.மீ தொலைவிலும், பூரிக்கு தென்- தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவிலும் நரசாபூருக்கு கிழக்கே வடகிழக்கே 370 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் கோபால்பூருக்கு அருகில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிஸா கடற்கரைகளைக் கடக்கும் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வு 2 மணி நேரம் நீடிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அக்வான் புயல் முதலில் தமிழகம் நோக்கி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் ஆந்திராவின் நெல்லூர் - டுனி இடையே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அந்த இடத்தையும் மாற்றிவிட்டு வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிஸாவின் கோபால்பூருக்கு இடையே கரையை கடக்கிறது.

இதனால் இன்றும் நாளையும் ஒடிஸாவின் தெற்கு , வடக்கு கடலோர பகுதிகளில் கனமவை முதல் மிக கனமழையும் ஓரிகு இடங்களில் அதிதீவிர கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கஞ்சம், மல்கன்கிரி, ராயகடா, கோராபுட், கலாஹண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக பாய்ப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 448 புயல் பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலம் 3000 மையங்கள் தயார்படுத்ப்பட்டு வருகின்றன.

1 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக 60 ஒடிஸா பேரிடர் விரைவு அதிரடிப் படை குழுக்களும் 14 தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்களும் களமிறங்கியுள்ளன.

கோபால்பூர் அமைந்துள்ள கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், கஜபதி மாவட்டத்தில் சுமார் 16,000 பேரும் கந்தமால் மாவட்டத்தில் 3 ஆயிரம் பேரும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நிலச்சரிவு அபாயம் உள்ளதால் கஞ்சம் மற்றும் கந்தமால் மாவட்டங்களை இணைக்கும் கலிங்கா மற்றும் கஜல்பாடி போன்ற மலைப் பாதை சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

உணவுப் பொருட்கள், குடிநீர் மற்றும் பாம்பு கடிக்கு எதிரான மருந்துகளை நாங்கள் முன்கூட்டியே தயார் நிலையில் உள்ளது. அவசரகால தேவைகளுக்காக மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.1 கோடி வழங்கியுள்ளது.

பொதுவாக புயலுக்கு முன் பகுதி, கண் பகுதி, பின்பகுதி என 3 பகுதிகள் உள்ளன. இதில் கண் பகுதி கடக்கும் போதுதான் காற்றும் மழையும் அதிகமாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+