பாதையை மாற்றிய அக்வான் புயல்! 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அப்டேட்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த அக்வான் புயல், தற்போது தனது பாதையை மாற்றியிருக்கிறது. இந்நிலையில் நவ.23ம் தேதி தஞ்சாவூர் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்றுவரை, புயல் மசூலிப்பட்டிணம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று புயல் தெற்கு ஒடிசாவை ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

புயல் நம்மை தாண்டி போய்விட்டது என்றாலே மழைக்கு வாய்ப்பு மிக குறைவுதான். நவ.20ம் தேதி புயல் கரையை கடக்க உள்ள நிலையில்.. நவ.23ம் தேதி தஞ்சாவூர் உட்பட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்திருப்பதால், டெல்டா விவசாயிகள் சற்றே நிம்மதியடைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
