வங்கக்கடலில் உருவானது அக்வான் புயல்.. சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் அக்வான் புயல் உருவானது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது எனவும், இது சென்னைக்கு கிழக்கே 610 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், வரும் வரும் 20 ஆம் தேதி நெல்லூர் - துனி இடையே அதி தீவிர புயலாக கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்நிலையில் மேலும் வலுவடைந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தொடர்ந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் ஏற்கனவே கூறியிருந்தது.

Cyclone

அதன்படி இன்று இரவு 7 மணியளவில் வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அக்வான் புயலாக உருவானது. இந்த புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் நாளை மறுநாள் அதி தீவிர புயலாக மாறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதலில் 19 ஆம் தேதி ஆந்திரால் கரையை கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், வரும் 20 ஆம் தேதி அக்வான் புயல் ஆந்திராவின் அதி தீவிர புயலாக நெல்லூர் - துனி இடையே கரையை கடக்கும் என கூறியுள்ளது. புயல் கரையை கடக்கும் போது, 130 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என கூறியுள்ளது. தற்போது சென்னைக்கு கிழக்கே 610 கிமீ தொலைவில் இந்த புயலானது மையம் கொண்டுள்ளது.

இதனால் புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தை பொறுத்தவரை வரும் 18 ஆம் தேதியில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் வட தமிழக கடற்கரை பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வரையில் காற்று வீசக்கூடும் எனவும், ஒரு சில நேரங்களில் 60 கிமீ வேகத்தில் காற்ற வீசக்கூடும். இதனால் இன்று முதல் வரும் 20 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு வட கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+