இன்னும் 36 மணி நேரத்தில் உருவாகும் அக்வான் புயல்! வங்கக்கடலில் நடக்கப்போகும் மாற்றம்! உஷார் மக்களே!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்திருக்கிறது. இது இன்னும் 36 மணி நேரத்தில் 'அக்வான்' புயலாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலங்களில்.. வங்கக்கடல் பகுதியில் புயல்கள் உருவாவது வாடிக்கையானதுதான். அதுவும் இந்த ஆண்டு, கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாகியிருக்கிறது. இதைதான் சூப்பர் எல்-நினோ என்று சொல்கிறார்கள். எனவே, கூடுதலான புயல்கள் உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

அதன்படியே தற்போது வங்கக்கடலில் 3வது புயல் சின்னம் உருவாகியிருக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருக்கும் இது.. அடுத்த சில மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் மாறும். புயலாக மாற 36 மணி நேரம் ஆகும். இப்படி உருவாகும் புயலுக்கு ஈரான் வைத்த 'அக்வான்' என்கிற பெயர் சூட்டப்படும். அக்வான் என்றால் அரக்கன் என்ற பொருள்.
இந்த புயல் எங்கு கரையை கடக்கும்? என்பதுதான் தற்போதைய கேள்வி. சில தனியார் வானிலை ஆய்வாளர்கள் சென்னையை கை காட்டுகிறார்கள். சென்னைக்குதான் புயல் என்று சொல்கிறார்கள். ஆனால், புயல் கரையை கடப்பதில் சில லாஜிக் இருக்கிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் புயல்கள் ஆந்திரா, வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா நோக்கி செல்லும். அதுவே தெற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புயல்கள் சென்னை மற்றும் வட மாவட்டங்களில் கரையை கடக்கும்.
அக்வான் மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருக்கிறது. இது நகரும் திசையை இப்போது வரை கணித்ததில், தெற்கு ஆந்திரா.. குறிப்பாக ஓங்கோல், மசூலிப்பட்டிணம் பகுதியில் கரையை கடக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், புயலின் பாதையை அது கரையை கடப்பதற்கு 10-12 மணி நேரத்திற்கு முன்னர் கணிப்பதுதான் சரியாக வரும். அந்த வகையில் AI வானிலை மாதிரியை வைத்து பார்க்கும்போது புயல் சென்னைக்குதான். அதுவே வழக்கமான நடைமுறையை வைத்து பார்க்கும்போது.. ஆந்திராவுக்கு போகும் என்று சொல்லப்படுகிறது.
சிம்பிளாக சொல்வதெனில்.. அக்வான் வலுவடைந்தால் நமக்கு கிடையாது. வலுவில்லாமல் சாதாரண புயலாக இருந்தால் ஸ்கெட்ச் நமக்குதான். எனவே நாளை கிடைக்கும் வானிலை மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம்தான் புயல் எங்கு கரையை கடக்கும் என்பதை சரியாக சொல்ல முடியும்.



Click it and Unblock the Notifications
